Tamilnadu

News August 21, 2025

புதுச்சேரி துணை வட்டாட்சியர் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரியில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பதவிக்கு, போட்டித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (31/08/25) அன்று நடைபெற உள்ளது. போட்டிக்கான நுழைவு சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், போட்டித் தேர்வு புதுச்சேரி காரைக்கால், மாஹே மற்றும் யானாம் பகுதியில் நடைபெறும் என்று புதுச்சேரி அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

News August 21, 2025

மேட்டூர் அணையின் 92-வது பிறந்தநாள் இன்று

image

தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று (ஆக.21) 92-வது பிறந்தநாள். தமிழகத்தின் மிகப்பெரிய அணை நமது மேட்டூர் அணை. அணையை கட்ட சுமார் 9 ஆண்டுகள் ஆனது. கடந்த 1934-ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கட்டும் பணியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

News August 21, 2025

புதுகை அருங்காட்சியகத்தில் புதிர்ப்போட்டி

image

புதுகை அருங்காட்சியகம் சார்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் வரும் ஆக.21, 22ம் தேதிகளில் அருங்காட்சியகம் வரும் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருங்காட்சியகம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆக.23 அன்று சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

செம்மறி ஆடு ,வெள்ள ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம்

image

திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மையத்தில் நாளை (22ம் தேதி) செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடக்கிறது. கட்டணம் ரூ.500 + 18% ஜிஎஸ்டி உண்டு . கலந்து கொள்வோருக்கு உணவு, சிற்றுண்டி, சான்றிதழ், புத்தகம் வழங்கப்படும். முன்பதிவு இன்று (21ம் தேதி) மாலைக்குள் அவசியம். தொடர்புக்கு: 04175-298258, 95514-19375.

News August 21, 2025

புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பேசிய டிஐஜி தர்மராஜ் காவல் நிலையங்களில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு நீண்ட நாட்களாக கோர்ட்டில் ஆஜராகாதவர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

News August 21, 2025

காட்பாடியில் ரயில் சக்கரம் ஏறியதில் பெண் பலி

image

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (36) விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல, மனைவி சிந்து (32) உடன் காட்பாடி ரயில்வே நிலையம் வந்தார். நேற்று (ஆக.20) காலை சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில் மெதுவாக கிளம்பியபோது, கணவரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை உணர்ந்த சிந்து, அதை கொடுக்க முயன்றார். அந்த நேரத்தில் தவறி தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

News August 21, 2025

நெல்லை: காவல்துறையில் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News August 21, 2025

கோவையில் மீண்டும் தலைதுாக்கும் போஸ்டர் கலாசாரம்

image

கோவையில் அரசு, தனியார் சுவர்கள், மேம்பாலத் தூண்கள் உள்ளிட்ட இடங்களில் அரசியல், வணிக, தனிநபர் போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்படுகின்றன. இது வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து, நகரின் அழகை கெடுக்கிறது. முன்பு ஓவியங்கள் வரைவதால் தடுக்கப்பட்ட போஸ்டர் ஒட்டும் பழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. பொதுசொத்தையும், நகரின் அழகையும் கெடுக்கும் நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

News August 21, 2025

இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி

image

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு 30 நாள்கள் இலவச இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர் நாளை (ஆக. 23) தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

News August 21, 2025

சேலத்தில் வாலிபர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு குண்டாஸ்

image

கடந்த ஜூலை 15- ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிராஜா (35), விக்னேஷ் (20), பிரவீன்ஷா (22), கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), முத்து ரிஷிகபூர் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!