India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், திருவெண்ணெய்நல்லூர் அருகே தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 18) நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 418 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும். 2.02 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக 1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இந்த விழா அமைந்தது.
பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க
வேலூர் மாவட்டம் சம்பத் நகரைச் சேர்ந்தவர் தனுஷ் (20). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் ஆதார் அட்டையை பார்த்த டாக்டர்கள் சிறுமிக்கு 18 வயது நிரம்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே பண்டாரவிளையை சேர்ந்தவர் ஜெபாவைலட்(28). இவருக்கும், குருவுமேடு பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2 பேரும் ஏப்.16 அன்று மாரிக்கனி வீட்டில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஜெபாவைலட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.
பாப்பாரப்பட்டி சொரக்காபட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் 48, குடிப்பழக்கம் உடையவர். இதில் ஏற்பட்ட தகராறில் மனைவி சத்யா தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியை மீண்டும் அழைத்தபோது வர மறுத்துவிட்டதால மனமுடைந்த அவர் கடந்த 8ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முன்றார். அவரை மீட்டு தர்மபுரி ஜிஹெச்சில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் கடந்த 8ஆம் தேதி, ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு “Community Lifesaver Award” வழங்கி கௌரவித்துள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதி. இவர்கள் வீட்டிற்கு வந்த வட மாநில இளைஞர் ஒருவர், சுப்பிரமணியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜெயலட்சுமி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்து, இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.