India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், சங்கங்கள், உணவுக்கூடங்கள், கல்வி நிலையங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அபராதத்தைத் தவிர்க்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் ஏப்ரல் 18 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி புனித வெள்ளி ஒட்டி குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவையினால் அனுஷ்டிப்பு▶️ காலை 10 மணி செட்டிச்சாவடி பகுதியில் நீதிமன்றம் சார்பில் மரம் நடும் விழா ▶️மாலை 3 மணி மத்திய அரசை கண்டித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 6 மணி கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூசைகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் சட்ட முறையாக அமல்படுத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் கட்டாயம் எனவும், இல்லை என்றால் தொழிற்சாலை விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-04-2025) வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.86-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முட்டை விலையை பொறுத்தவரையில், ரூ.4.15 ஆக நீடித்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வருகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச பாரம்பரிய தினம் மற்றும் புனித வெள்ளி இன்று (ஏப்ரல் 18) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
சென்னை மாநகரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாகவும் பாதுகாப்புடனும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <
தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரி பிரிவில் 20 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின் தொழில் நுட்ப வல்லுனர் (Electrical Technician) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
Sorry, no posts matched your criteria.