India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற செப்.4ம் தேதி கடலூர், மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில், பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமும், கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வர்கள் வழியாகவும் tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் செப்3ம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார். தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவை வழிநடத்துவது யாரென்றே தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த நடிகர் விஜய்க்கு, அதிமுக தற்போது யாரிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சிக்கு தலைவர் இருக்க முடியும் எனவும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடிகர் விஜய் இருப்பதாகவும் கூறி அவர் பதிலடி தந்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற விநாயகர் திருத்தலங்களில் ஈச்சனாரி விநாயகர் கோவிலும் ஒன்றாகும். இந்த விநாயகர் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்தல விநாயகரை மனமுருகி வேண்டினால் எடுத்த காரியம் அனைத்திலும் தடங்கல் இல்லாமல் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி – 10th/ <
REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் <
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த <
Sorry, no posts matched your criteria.