India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 23 வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை, 17ம் தேதி தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூரில் குன்றின் மேல் அமைத்துள்ளது ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில். இங்கு பிரகாரத்தில் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழை இல்லாத காலத்தில் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றி சிறப்பு பூஜை நடத்துவார்கள்.தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் தொட்டியில் உள்ள தண்ணீர் வற்றாமல் இருந்தால் மழை வரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
சேலம் மாவட்டம் மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், நோய்கள் போன்றவை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகுமாம். இதை நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமானது நாளை(16.04.2025) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் அதிகமான, புகழ்மிக்க நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் தகுந்த நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய இருக்கிறார்கள் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் சிறிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை வேலை நாடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதிற்கு வரும் 25.04.2025-ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டாரங்களிலுள்ள குறிப்பிட்ட அலகுகளில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட அதிசய சிவாலயம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் ஒரு கோடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.ஒரு கோடி சித்தர்கள் சிவபெருமானை வழிபட்ட பகுதி என்பதால், இந்த ஊருக்கு ‘ஒருகோடி’ என பெயர் வந்தது என்கிறார்கள். கோடி கொடுத்த நாதரை வழிபட்டால், கோடி கோடியாய் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய வேலூர் இலங்கையோடும் தொடர்பு கொண்டுள்ளது. இலங்கையின் கண்டி பகுதியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரமராச சிங்கன் வேலூர் கோட்டையில் பிரிட்டிஷால் சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தார். மன்னர் விக்ரமராச சிங்கன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இங்கு நினைவிடம் உள்ளது. இலங்கை சுதந்திர போரிலும் தொடர்பு கொண்ட வேலூர் பற்றிய தங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
நாகை மற்றும் திருவாரூர் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் 26 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்த சிறப்பு முகாம் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆதார் திருத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை, படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் வேப்பிலை தண்ணீர் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி உடலில் தெளித்தால் 3-5 நாட்களில் அம்மை நோய் விலகிவிடும். மேலும், திருமண வரம், குழந்தை வரம், கண்நோய், கண்பார்வைக்கும் இங்கு வழிப்பட்டால் எல்லாம் நிவர்தியாகும் என்பது ஐதீகம். *திருமணம்&குழந்தைவரம், அம்மை&கண்நோய் உள்ளவர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.