Tamilnadu

News April 15, 2025

திருமணத்தை கைக்கூடச்செய்யும் வைத்தியநாதசுவாமி

image

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் அமைந்துள்ள நந்தி வழிப்பாட்டில் சிறப்பு வாய்ந்த திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் 9 நந்திகளுடன் திருமழப்பாடி திருத்தலம் விளங்கி வருகிறது இந்த கோவிலின் சிறப்பும்சம் திருமணம் கைக்கூடாதவர்கள் திருமணத்தை கைக்கூடச் செய்யும் அற்புத திருத்தலம்,தேவைப்படுறவங்களுக்கு #SHARE பண்ணுங்க.

News April 15, 2025

தூத்துக்குடியில் ஏப்.17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.04.25 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 15, 2025

சாதனை படைத்த மாணவிக்கு கேடயம் வழங்கிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி -1 (TNPSC GROUP-1) தேர்வில் வெற்றிபெற்ற செல்வி கதிர்ச்செல்வி அவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (15.04.2025) கேடயம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்ளார்.

News April 15, 2025

தென்காசி: வேலைதேடும் இளைஞரா நீங்கள் ?

image

தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் . வேலைதேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 15, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, ஸ்ரீவைகுண்டம் என 8 இடங்களில் அரசு மானியத்துடன் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பராமரிப்பு பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் சேர்ந்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (ஏப்.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

நடந்து சென்றவர் இரு சக்கர வாகனம் மோதி பலி

image

நெமிலி அங்காளம்மன் கோயில் அருகில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்தவர் கரியாக்குடல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பது இன்று போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

News April 15, 2025

சித்திரைத் திருவிழா பக்தர்களுக்கு கட்டண அறிவிப்பு

image

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

News April 15, 2025

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குமாரகோவில் சுவாமி தரிசனம்

image

திருச்சூர் எம்.பியும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மற்றும் நடிகருமான சுரேஷ்கோபி இன்று குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். 

News April 15, 2025

பைக் விபத்து: சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

image

சென்னை சாலிகிராமத்தில் கடந்த 11ஆம் தேதி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயார் ஜாமினில் விடுவிப்பு. விபத்தில் படுகாயம் அடைந்த 76 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 15, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் இன்றைய அறிவிப்பு

image

மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஸ்டார் அகாடமி மூலம் 12 முதல் 21 வயதிற்குப்பட்டோருக்கு  இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்றுநர் பதவி நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!