India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் சேட் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்கள் உங்கள் வீடியோ உரையாடல்களை பதிவு செய்து அச்சுறுத்த பயன்படுத்தலாம் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்.
திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம் விலக்கு பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமி ஜெசிக்கா பாதுகாப்பற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தைக்கு உரிமை கோர விரும்புவோர் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் 30 நாட்களுக்குள் அணுக வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. அவர்களின் சமீபத்திய அறிவிப்பில், “சமூக ஊடகத்தில் உங்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டிருப்பதை கவனித்தால், உடனடியாக அந்த சமூக ஊடக சேவை வழங்குபவரைத் தகவல் தெரிவித்து, அந்தக் கணக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் நாளை முதல் ‘டிரெக் தமிழ்நாடு’ மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. முதல்கட்டமாக வால்பாறை, மானாம்பள்ளி வழித்தடம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வனத்துறையின் இணையதளமான https://trektamilnadu.com இல் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி ரூ.10 குறைந்து ரூ.86 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.
மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.