Tamilnadu

News August 22, 2025

திருவள்ளூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை (ஆகஸ்ட் 12) திருவள்ளூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

News August 22, 2025

நாமக்கல் அருகே சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு!

image

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் சாமி கும்பிட்டு விட்டு ஒரு வேனில் மீண்டும் சேலம் நோக்கி மோகன், சுசீலா, கமலம், சுகுமார், புவனேஸ்வரி ஆகிய ஐவர் இன்று குமாரபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்றுகொண்டிருந்த ஈச்சர் வாகனத்தின் பின்புற பகுதியில் மோதியதில், ஆம்னி வேன் ஓட்டிய சுகுமார், மோகன், கமலம் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். புவனேஸ்வரி, சுசிலா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

News August 22, 2025

சேலம் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

image

சேலம் மாநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது, ” தற்போது WhatsApp மூலம் RTO Challan எனப்படும் போலி செயலிகள் பரவி வருகின்றன. இதனை டவுன்லோட் செய்து install செய்தால், உங்கள் மொபைல் தகவல்கள் திருடப்படுவதோடு, மோசடிக்காரர்கள் தவறான முறையில் பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற போலி செயலிகளை நம்பாமல் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT

News August 22, 2025

நெல்லையில் முக்கிய ரயில்கள் சேவை மூன்று மாதம் நீடிப்பு

image

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 22, 2025

வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ (Certification in videography and video Editing) வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

News August 22, 2025

தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் வீரதீர செயல் புரிந்து சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 மாநில அரசின் விருது ஒரு லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும் இதற்கு awards:tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

ரவுடிகள் மீது கடும் நடவடிக்க எடுக்க போலீஸ் சூப்ரண்ட் உத்தரவு

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
இதில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளசாராயம் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் ரவுடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ்.பி.செல்வகுமார் உத்தரவிட்டார்

News August 22, 2025

ஸ்ரீரங்கம் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

image

தமிழகத்தில் முக்கியமான 12 கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 22, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

News August 22, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!