Tamilnadu

News April 14, 2025

இராசிபுரம்: பேருந்து விபத்து.. 7 பேர் பணி பணியிடை நீக்கம்

image

நாமக்கல்: ராசிபுரம் நகரில் இருந்து (ஏப்.14) இன்று சேலம் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து முன் சக்கரம் கழன்று ஓடிய விபத்தில், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து விபத்து ஏற்படும் அளவிற்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட ராசிபுரம் கிளை மேலாளர், வாகன மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப பணியாளர் என 7 பேரை பணி நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

News April 14, 2025

காவிரி ஆற்றில் சிறுமிகள் மூழ்கி பலி

image

தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன்கொட்டாய் சேர்ந்த இரண்டு குடும்பத்தினா் இன்று விடுமுறைக்காக ஒகேனக்கல் சென்றனர். அப்போது ஆலம்பாடி ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் போது பாக்கியலட்சுமி மற்றும் காவிய இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்று நீச்சல் தெரியாமல் உயிர் இழந்தனர். காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உதவியுடன் அரை மணிநேரம் போராடி ஆற்றில் இருந்து உடலை மிட்டனர்.

News April 14, 2025

1252 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

நாகை அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் இன்று அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் 1252 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக ரூ.31 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 824 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News April 14, 2025

சிவகங்கை மாவட்ட கலெக்டர் பற்றிய ஓர் தகவல்

image

தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஆஷா அஜித். இவர் 2015 IAS Batch-ஐ சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் ஆகும். இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருந்துள்ளார். தேவகோட்டையில் துணை ஆட்சியராகவும் பணி புரிந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்ட கலெக்டராக கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். Share.

News April 14, 2025

இரவு ரோந்து பணி: போலீசார் விவரம் வெளியீடு…!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 14.04.2025 அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணிக்காக  1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

News April 14, 2025

திருச்சி: நாளை வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்படும் 

image

திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க நாளை (15.04.25) சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

News April 14, 2025

கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

image

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 14, 2025

மதுரையில் பார்க்க வேண்டிய இடங்கள்

image

மதுரை மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோர் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சென்று வருகின்றனர்.ஆனால் அதையும் தவிர்த்து கட்டாயம் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள் உள்ளது.
1.திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில்
2.திருமலை நாயக்கர் அரண்மனை
3.மதுரை அழகர் கோவில்
4.காந்தி அருங்காட்சியகம்
5.வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
ஷேர் செய்யுங்கள்

News April 14, 2025

குமரியின் அருமையான சுற்றுலா தலம்

image

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று ஏப்ரல் 14 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!