India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். திருட்டை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் முகவரி மற்றும் வீடு எத்தனை நாட்களுக்குப் பூட்டி இருக்கும் போன்ற தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, 81900-00100 எண்ணிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!
பாவபுண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரபுத்திரன் நாயனாருக்கு காஞ்சிபுரத்தையடுத்து தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரபுத்திர நாயனார் சித்ரா பௌர்ணமி அன்று பிறந்ததினால் அன்றைய தினத்தில் இங்கு வந்து வழிபட்டால் பாவங்கள் குறையும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி தெரியாத நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
புதுச்சேரி இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்தியில், இணையவழி குற்றங்களில் 85 சதவீதம் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக நடக்கிறது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் முன்பின் தெரியாதவர்களுக்கு சிம் கார்டு வாங்கி தர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
கரூர் மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் ஆதார் அட்டை பயோமெட்ரிக் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நாளை(ஏப்.15) முதல் தொடங்குவதாக கரூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தமிழனின் இன்று தெரிவித்துள்ளார் . ஆதார் விதிமுறைப்படி 5 மற்றும் 15 வயது கடந்த பள்ளி மாணவர்கள் தங்களின் கைரேகை மற்றும் தற்போது புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
“விசுவாவசு”என்பது தமிழ் புத்தாண்டு ஆண்டின் பெயர்களில் ஒரு பெயராகும். இது தமிழ் புத்தாண்டு வருடங்களில் அறுபது பெயர்களில் 39வது பெயராகவும், சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகவும், சுபமான ஆண்டாகவும், கருதப்படுகிறது. இந்த ஆண்டில் சிவ வழிபாட்டையும், சூரிய வழிபாட்டையும் மக்கள் தினமும் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது சித்தர்களின் அருள்வாக்கு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம் . அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம்,குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை இமயமலையின் ஒரு பகுதி என ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் பகுதியில் மிக உயரமான மலை என்றால் அது வெள்ளி மலை தான். இந்த மலையின் உச்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தைக் காண அரைமணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து சென்றால் கைலாயத்தையே கண்ட ஒரு அனுபவம் உங்களுக்கு கிட்டும். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.