India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Advanced CNC, Aeronautical Structure, Multimedia போன்ற பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டது. 8ம் மற்றும் 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டை அவசியம். இலவச சைக்கிள், பாடநூல்கள், உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்ற 88254 34331, 9566531310 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 22) காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற ஆக.29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.22) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முகையூர் வட்டாரம் ஆலம்பாடி JPM திருமண மஹால், வி.அரியலூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வெங்கந்தூர் கிராம சேவை மைய கட்டிடம், TV நல்லூர் வட்டாரத்திற்கு பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். விசர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம், ஆண்டிபாளையம், பொங்கலூர், எஸ் வி புரம், கணியூர், கொடிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் மற்றும் குளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே 17 வயது பெண் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரத்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆண்டு குழந்தை திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1ஆம் தேதி சிறுமிக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சரத்குமார் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்குபதிந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, காவேரிப்பாக்கம், அரக்கோணம், வாலாஜா, திமிரி ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-22) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் முகாமில் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (22.08.2025) திருவொற்றியூர் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட், வளசரவாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 11 மண்டலங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-22) நடக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
Sorry, no posts matched your criteria.