Tamilnadu

News April 13, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

நாகையில் பயிற்சியுடன் கூடிய வேலை

image

ஐ.ஒ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் DEEE முடித்த நாகை மாவட்ட கிராம புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 30 நாட்கள் தொழில் பழகுநர் பயிற்சி இலவசமாக மத்திய அரசு சான்றுடன் வழங்கப்படுகிறது. மே 5ஆம் தேதி தொடங்க உள்ள பயிற்சியில் பங்குபெற 6374005365 / 8870940443 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் முன் பதிவு செய்ய பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

News April 13, 2025

வரலாற்று சிறப்பு மிக்க சங்கரபதி முனீஸ்வரர்

image

காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதி புதூர் அருகே அமைந்துள்ள சங்கரபதி முனீஸ்வரர் வரலாற்று சிறப்பு மிக்க தெய்வம். மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களால் பிடிக்கும் முன் அவர்கள் தங்கி இருந்த சங்கரபதி கோட்டைக்கு அருகில் இருப்பதால் சங்கரபதி முனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்த கோயில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி தேங்காய் உடைத்து செல்வது வழக்கம்.

News April 13, 2025

புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

News April 13, 2025

நாளைக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

image

ஏப்ரல் 15 அன்று மீன் பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன் பிடி விசை படகுகளை நாளை 14-4-2025 இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட படகு உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. SHARE பண்ணுங்க.

News April 13, 2025

விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. SHARE பண்ணுங்க.

News April 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று  சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள் எனவும் அங்கீகரிக்கப்படாத  டிரேடிங் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் லிங்கை நம்பி கிளிக் செய்ய  வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 13, 2025

குமரியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!