India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் முகாம் இன்று (21.10.2024) திங்கள் கிழமை நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் அடிப்படை தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் விநாயகம் மகள் வைஷ்ணவி (26). முதுநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கும் வைஷ்ணவி நேற்று பணி முடிந்தபின் அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணைய அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில், இளைஞரணி குமரி மாவட்ட துணை அமைப்பாளரும், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செஞ்சி வியாபாரிகள் சங்கங்கள், அனைத்து வாகன சங்கங்களின் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் செஞ்சி சுமங்கலி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புதியதாக நங்கிலிகொண்டான் எனும் இடத்தில் தொடங்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் செஞ்சி வட்டார மக்களுக்கு கட்டண தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் காவல்துறை சார்பில் அக்டோபர் 21ஆம் தேதி பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வீர வணக்க நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று (21) காலை 7:45 மணிக்கு அங்குள்ள காவலர்கள் நினைவு ஸ்துபி யில் எஸ்பி தலைமையில் மரியாதை செலுத்தப்படுகிறது.
வட சென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, ரயில்வே மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-க்கு ரயில்வே தளவாடங்கள் பராமரிப்பு, சிக்னல் போன்ற உபகரணங்களை சரியான முறையில் பராமரித்தல், போதுமான நிதி ஒதுக்குதல், காலி பணியிடங்களை உடனே நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரயில் சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதினார்.
விக்கிரவாண்டியில் 27.10.2024 அன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை திருவிழா அழைப்பிதழை நேற்று மாவட்டத் தலைவர் மின்னல் குமார் தலைமையில் பழைய பல்லாவரம் பகுதி பொதுமக்களுக்கு வீடு வீடாகவும் கடைகளுக்கும் சென்று வழங்கி, மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மீகப் பயணமாக வாரணவாசி சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சிக்காக பங்கேற்ற்போது, அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் மடாதிபதியுடன் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள், பிரதமருக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான இலவச திருமணங்கள் இன்று நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற குமரக்கோட்டம் திருக்கோயிலில் 3 திருமணங்களும் என மொத்தம் 11 திருமணங்கள் காலை 6 மணியிலிருந்து 7.30 நடைபெறுகிறது.
அப்புறம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் 1994 -1997 மற்றும் 1995 -1998 ஆண்டு பொறியியல் மற்றும் வரலாற்று துறை முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அழகிய சந்திப்பு விழா நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவக்குமார், முன்னாள் பொருளியல் துறை தலைவர் ராமநாதன் மற்றும் முன்னாள் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.