Tamilnadu

News October 20, 2024

அரியலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷார் செய்யவும்

News October 20, 2024

கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அக்டோபர்-21 (நாளை) மற்றும் அக்டோபர்-23 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

திருச்சியில் வெளுத்து வாங்கப்போகும் மழை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) முதல் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

தர்மபுரி மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 20) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (அக்டோபர் 21) தர்மபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News October 20, 2024

ராம்நாடு தொ.உ.மீ. குழுவின் புதிய நிர்வாகி நியமனம்

image

இராமநாதபுரம் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக ஏனாதியை சேர்ந்த வெற்றிமுருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்‌. நியமனம் செய்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் பரிந்துரை செய்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட செயலாளர் தர்மருக்கும் நன்றி தெரிவித்தார்.

News October 20, 2024

ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

image

ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் வனத்துறையினர் பாதுகாப்பு கருதி தடை செய்துள்ளனர்.

News October 20, 2024

தி.மலையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 20, 2024

ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 20, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 20, 2024

அரியலூரில் 4 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

image

அரியலூர் அடுத்த தூத்தூர் மற்றும் திருமானூர் போலீசார் இருவேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயபால், மோகன்ராஜ், பாண்டியன், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 20 சவரன் நகை (ம) இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் 4 பேரும் அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உத்தரவின் படி அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!