Tamilnadu

News October 20, 2024

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ் 

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குகுறைந்த வாடகையில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் இ-வாடகை செயலியான ‘உழவன் செயலி’ மூலம் குறைவான வாடகையில் இயந்திரங்கள், மற்றும் கருவிகளை வீட்டிலிருந்தே பதிவு செய்து பயன் பெறலாம். பதிவு செய்ய, செயலில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 20, 2024

காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்

image

தஞ்சாவூா் – பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் எதிரில் வந்த லாரி மோதிய விபத்தில் தஞ்சாவூர் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

News October 20, 2024

தர்மபுரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், இன்று(அக்டோபர் 20) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

பள்ளி மாணவன் மீது தாக்குதல்: 5 பேர் கைது

image

ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவனை, நேற்று மாலை வண்டலூரில் 5 பேர் கடுமையாக தாக்கி கத்தியால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில், பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாக்கியதாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பெருங்களத்தூரை சேர்ந்த திவாகர் (18) சஞ்சய் (18), கிரிதரன் (18) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.

News October 20, 2024

மருது பாண்டியர்களின் குருபூஜைக்கு டிடிவி தினகரன் வருகை 

image

 இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடி வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 223-வது குரு பூஜையினை முன்னிட்டு, 24ஆம் தேதி அன்று காலை 10 00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வருகை தர உள்ளால். இதில், நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

News October 20, 2024

மதுரை மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ்

image

தென்னை மரங்களுக்கு அக். 31க்குள் இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமென தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 17 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடியாகிறது.இயற்கை மற்றும் பிற ஆபத்துகளுக்கு எதிராக தென்னை மரத்திற்கு வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர் 31 கடைசிநாள் என்பதால் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம் என்றார்.

News October 20, 2024

த.வெ.க. மாநாட்டில் ஏற்பாடுகள் தீவிரம்

image

விக்கிரவாண்டியில், த.வெ.க. முதல் மாநாடு வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு 5 உள்ளே வரும் வழிகள், 15 வெளியேறும் வழிகள், 4 பார்க்கிங் இடங்கள், பார்க்கிங் முதல் மாநாடு வரை 500+ சிசிடிவி கேமராக்கள், பகுதி வாரியாக பிரித்து அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி வைக்கப்பட்டுள்ளது. பொருட்கள், ஆட்கள் காணாமல் போனால் கண்டுபிடிக்க கண்டுபிடிப்பு பகுதி போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

News October 20, 2024

தேவர் குருபூஜை: விதிமீறல் நடவடிக்கை எடுக்க தனிப்படை

image

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி இளஞ்செழியன் கூறியதவது; அக்.30ல் தேவர் ஜெயந்தி குருபூஜை, அரசு விழாக்களில் போலீஸ் அறிவிப்புகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் வகையில் டூவிலரில் வருபவர்களை பிடித்து வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

News October 20, 2024

சாத்தான்குளம் கொலை வழக்கில் 100 பக்கம் சாட்சியம்

image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் அளித்த 100 பக்க சாட்சியத்தை சிபிஐ தாக்கல் செய்தது. 100 பக்க சாட்சியம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

திருவண்ணாமலையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

error: Content is protected !!