Tamilnadu

News October 20, 2024

ஈரோட்டில் துணிகரம்: கோவிலில் நகை, உண்டியல் திருட்டு

image

ஈரோடு ஈ.வி.என்.ரோடு ஸ்டோனிபாலம் அருகில் பட்டத்தரசி அம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் திருடு போயுள்ளது. இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 2 கிராம் தங்க நகை திருடு போய் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News October 20, 2024

பயணிகளுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய காவல்துறையினர், தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு தொலைதூர ரயில்களில் பயணிகளிடம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். நிலையத்தில் இருந்து தினமும் புறப்பட்டு செல்லும் ரயில்களில் பட்டாசு எடுத்து செல்கிறார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை செய்கின்றனர். இன்றும் இப்பணி தொடரும் என தெரிவித்தனர்.

News October 20, 2024

விழுப்புரம் மாவட்டத்தின் மழைப்பொழிவு விபரம்

image

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 6.9 மில்லி மீட்டர், திண்டிவனம் 5 மில்லி மீட்டர், மரக்காணம் 5 மில்லி மீட்டர், செஞ்சி 4 மில்லி மீட்டர், வல்லம் 2 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 0.0 மில்லி மீட்டர், வானூர் 2 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 2 மில்லி மீட்டர், சூரப்பட்டு 2 மில்லி மீட்டர். சராசரியாக 2.90 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 20, 2024

மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

image

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொத்திக்குட்டை ஏரியில் இன்று துணி துவைத்தபோது, 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஏரியில் மூழ்கிய சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 20, 2024

மாநாடு குறித்து த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை

image

வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க. மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், குழந்தைகள், நீண்ட காலமாக உடல் நலமின்றி இருப்பவர்கள், முதியோர் உள்ளிட்டோர் வர வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீண்ட தூரப் பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக் கூடும், அதனால் அவர்களின் குடும்ப உறுப்பினர் என்ற உரிமையில் இதைச் சொல்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

சிவகிரி காவல் நிலையத்தில் தென்காசி SP ஆய்வு

image

தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேற்று(அக்.,19) மாலை சிவகிரி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். சிவகிரி மெயின் சாலையில் கட்டப்பட்டு வரும் சோதனை சாவடியை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். சோதனைச் சாவடி அருகே 2 பக்கமும் பேரிக்காற்று விளக்குகள், 2 பக்கமும் லைட் வசதிகள் வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

News October 20, 2024

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் பேருந்து இயக்க முடிவு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான இன்று (அக்.20), வரும் 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி.ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News October 20, 2024

மறக்க முடியாத நிகழ்ச்சி – துணை முதல்வர் பெருமிதம்

image

சேலத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இங்கு முதல்முறையாக துணை முதலமைச்சராக வந்துள்ள நிலையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.

News October 20, 2024

தேங்காய்பட்டினம் துறைமுகம் சீரமைப்பு: திட்ட மதிப்பீடு தயாரிப்பு

image

குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுக பாலம் பகுதி விழுந்தள்ளது. இதனைத் தொடர்ந்து இதனை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

242 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி, 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

error: Content is protected !!