Tamilnadu

News October 20, 2024

ரயில்வே கேட் 4 நாட்கள் மூடப்படுகிறது

image

கொடுமுடி பஸ் நிலையத்தில் இருந்து மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இந்த கேட் நேற்று காலை 8 மணிக்கு மூடப்பட்டது. வருகிற 22-ம் தேதி மாலை 6 மணி வரை கேட் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்பட்டிருக்கும். அதுவரை மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாற்று பாதையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

News October 20, 2024

முதல்வர் கோப்பை கால்பந்து போட்டியில் திண்டுக்கல் முதலிடம்

image

முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி நேரு விளையாட்டு மைதானத்தில் அக்.12-அக்.18 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 38 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதி போட்டியில் திண்டுக்கல் கல்லூரி அணி செங்கல்பட்டு அணியுடன் மோதியது. இரண்டு அணிகளும் சமநிலை பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் திண்டுக்கல் கல்லூரி அணி முதலிடத்தைப் பெற்று, ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையை வென்றுள்ளது.

News October 20, 2024

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர்

image

ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளாா். பகுதி அல்லது முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு படிப்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலுபவராக இருக்க வேண்டும். சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

News October 20, 2024

பெண்ணாடம் பள்ளிக்கு விருது வழங்கிய நடிகை

image

சென்னையில் தேசிய கல்வி நிறுவனம் நடத்திய விழாவில் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடம் சிறந்த புதுமை மிக்க பள்ளி மற்றும் சிறந்த தரமான கல்வியை வழங்கும் பள்ளி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நடிகை ரம்யா கிருஷ்ணன் வழங்க, பள்ளியின் சார்பில் பள்ளியின் துணை இயக்குனர் பார்வதி ஹரி கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

News October 20, 2024

தேனியில் 551 பணி ஆணை வழங்கல்

image

போடிநாயக்கனூர் சி.பி.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், வேலைநாடுபவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 551 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, பெரியகுளம் எம்.எல்.ஏ. கே.எஸ். சரவணகுமார் முன்னிலையில் வழங்கி வாழ்த்தினர்.

News October 20, 2024

ஆணழகன் போட்டியில் அசத்திய சிறுவன் 

image

நீலகிரி: கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் மற்றும் FYZ Gym சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது சிறப்பு விருந்தினராக பங்கேற்ற யூகேஜி பயிலும் ஆஷிக் என்ற சிறுவன் தனது உடற்கட்டை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், சிறுவனைப் பாராட்டி அவருக்கு ரூ.10,000 மதிப்புள்ள சைக்கிளை பரிசாக வழங்கினர்.

News October 20, 2024

சாத்தான்குளம் கொலை வழக்கில் 100 பக்கம் சாட்சியம்

image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் அளித்த 100 பக்க சாட்சியத்தை சிபிஐ தாக்கல் செய்தது. 100 பக்க சாட்சியம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

அதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

image

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பருவமழை பெய்து பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் தொடங்க உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

News October 20, 2024

மாநகரில் தொற்றுநோய் பரவும் அபாயம்

image

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தினமும் 800 டன்களுக்கும் அதிகமான குப்பைகள் சேகரமாகின்றன. வாரம் இருமுறை குப்பைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் மட்டும் 20 நாள்களுக்கு மேலாக குப்பைகள் அகற்றப்படாததால், குப்பைகள் மலைபோல் குவிந்து கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News October 20, 2024

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

image

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற பயிலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய http://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in ஆகிய மத்திய அரசின் இணையதளங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!