Tamilnadu

News October 20, 2024

சாத்தான்குளம் கொலை வழக்கில் 100 பக்கம் சாட்சியம்

image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் அளித்த 100 பக்க சாட்சியத்தை சிபிஐ தாக்கல் செய்தது. 100 பக்க சாட்சியம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

திருவண்ணாமலையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News October 20, 2024

அமைச்சர் காரை தொடர்ந்த மேயர், துணை மேயர் கார்கள் மோதல்

image

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு நேற்று முன்தினம்(அக்.,18) வண்ணார்பேட்டையில் ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு, GRT ஹோட்டல் அருகே சென்றபோது மேயர், துணை மேயர் கார்கள் அந்த காரை பின் தொடர்ந்தன. அப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பிரேக் பிடித்ததில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் மேயர், துணை மேயர் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தன.

News October 20, 2024

சிறப்பு குறைதீர்வு முகாமில் 197 மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்தது. முகாமில் மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 197 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளன. முகாமில் அதிகபட்சமாக 77 பேர் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 66 பேர் தங்களின் செல்போன் எண்ணை மாற்றவும் மனு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 20, 2024

பூ பறிக்க செல்லாததால் தந்தையை அடித்துக் கொலை

image

திருப்பத்தூர் அருகே ஏ.கே.மோட்டூர் ஊராட்சி புதுபூங்குளம் குமரன்நகரை சேர்ந்தவர் காந்தி (60), விவசாயி. இவருக்கு ராஜீவ் காந்தி என்ற மகன் உள்ளார். இவர்களது தோட்டத்தில் விளைந்த ரோஜா பூக்களை விற்பனைக்கு பறிக்க காந்தி செல்லாததால், அவருக்கும் அவரது மகனுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜீவ் காந்தி அவரது தந்தையை கட்டையால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News October 20, 2024

குமரியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை

image

தக்கலை, நாகர்கோவில், மார்த்தாண்டம், குமரி பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு விற்பனை நடக்கிறது. பருத்தி, பட்டுகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 11 மாத சந்தாதொகை செலுத்தினால் 12வது மாத சந்தாவை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, 30% தள்ளுபடியில் துணிகள் பெறும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ராஜேஷ்குமார் நேற்று கூறியுள்ளார். SHARE IT.

News October 20, 2024

டிஎன்பிஎல் சார்பில் இலவச மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம் புகழூரில் அமைந்துள்ள டிஎன்பிஎல் சார்பில், 297ஆவது இலவச மருத்துவ முகாம் அக்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, ஓனவாக்கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ள டிஎன்பிஎல் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 20, 2024

கலங்கரைவிளக்க சுற்றுலா பயணிகள் 300% அதிகரிப்பு

image

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் காணும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் கலங்கரை விளக்க மேல்தளத்திலிருந்து, சுற்றுபுற அழகை, பறவை பார்வையில் கண்டு ரசிக்கலாம் என்பதால், பயணிகள் கலங்கரைவிளக்க சுற்றுலாவிற்கு ஆர்வம் காட்டுகின்றனர். உங்களுக்கு கலங்கரை விளக்கம் பிடிக்குமா?

News October 20, 2024

சென்னையில் அதிகாலை கொட்டிய கனமழை

image

சென்னையில் கடந்த சில நாட்களாக காலை, இரவு என மாறி மாறி மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சைதாப்பேட்டை, தி.நகர் பகுதிகளில் லேசான மழை இருந்தது. அதிகாலை 4 மணியளவில், கிண்டி, ஆலந்தூர், வடபழனி பகுதிகளில் கனமழை பொழிந்தது. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசை பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில்?

News October 20, 2024

தேனி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி

image

தேனி முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சின்னப்பெண்ணு(55). கணவரை இழந்த இவர் தனது தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம்(அக்.18) இரவு வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சின்னப்பெண்ணு உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!