Tamilnadu

News October 19, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்று சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள், தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை அக்டோபர் 21 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

ஒரத்தநாடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இவர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 9 வயதுடைய பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லைஅளித்ததாகசம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

News October 19, 2024

தருமபுரி பாமக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

image

சென்னையில் இன்று (அக் 19) தர்மபுரி மாவட்ட நகர, பேரூர் ,ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனை கூட்டமானது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா அரசாங்கம் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் 2026 தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News October 19, 2024

இரவு 7 மணி வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 19, 2024

இரவு 7 மணி வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 19, 2024

இரவு 7 மணி வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 19, 2024

இரவு 7 மணி வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 19, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: கலெக்டர்

image

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த இன்றே (19.10.24) கடைசி நாள் என்று நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். மேலும், விருப்பம் உள்ளவர்கள் இணையதள முகவரிக்கு, வரைபடம், பாஸ்போர்ட் புகைபடம், வங்கி கணக்கு எண், ஆதார், குடும்ப அட்டை, உரிமை கட்டணம் கட்டி இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2024

நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

image

நாமக்கல் நகரப் பகுதிக்கு வருகின்ற 22ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். அதனால் அன்று காலை முதல் மாலை வரை நாமக்கல் நகரப் பகுதிக்குள் லாரிகள் மற்றும் பேருந்துகள் மாற்று பாதையில் செல்ல வேண்டுமென நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் பிரதான சாலை வழியாக வந்து மீண்டும் பைபாஸ் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

News October 19, 2024

திருப்பத்தூரில் ஊர் காவல் படையினருக்கு கேன்டீன் அட்டை

image

திருப்பத்தூர் மாவட்ட ஊர்காவல் படையினருக்கு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கான சீருடைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இன்று காலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்காவல் பிரிவு ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!