Tamilnadu

News October 19, 2024

உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தாட்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 19, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மானியக்கடன் பெற தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற http://newscheme.tahdco.com என்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) இணையதளத்தில் CM ARISE திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். 

News October 19, 2024

உடுமலைக்கு முன்னாள் முதல்வர் வருகை

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரன் பட்டியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது .இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள உள்ளார் என அதிமுக ஓபிஸ் அணி உடுமலை நகர செயலாளர் லயன் நடராஜன் தெரிவித்தார்.

News October 19, 2024

அரியலூர் மாவட்ட பொது மக்களுக்கு எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் டெலிகிராம், வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டு, பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி பரிவர்த்தனைக்கான ஓடிபியை பகிர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 19, 2024

சாதனை படைத்த குன்னூர் சிறுவன்

image

நீலகிரி மாவட்டம், குன்னூர், மணியாட்டி பகுதியில் ஆன்லைன் மூலம் சிவபுராணம் போட்டியில் கலந்துகொண்டு 90 வரிகள் கொண்ட சிவபுராண பாடலை 2 நிமிடம் 42 நொடிகளில் வாசித்து குன்னூர் பி.மணியட்டி பகுதியை சேர்ந்த கங்காதரன் – பசவகானா தம்பதியரின் மகன் யாசிக் சாதனை படைத்துள்ளான். இந்த சாதனையை நிகழ்த்திய சிறுவனை ஊர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

News October 19, 2024

இன்று இங்கெல்லாம் மின்தடை

image

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை (அக்.19) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காஞ்சிபுரத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, சங்குசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சதாவரம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை தொழிற்பேட்டை, ஐயம்பேட்டை, காந்தி சாலை, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News October 19, 2024

இலங்கையில் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை

image

இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த (செப்.28) அன்று மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் காவல் (அக்.10) நிறைவடைந்த நிலையில் அபதாரம் விதித்து விடுதலை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று(அக்.18) சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். அவர்களை இராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர்கள் வரவேற்றனர்.

News October 19, 2024

நெல்லை வட்டார கல்வி அலுவலர் திடீர் இடமாற்றம்

image

திருநெல்வேலி வட்டார கல்வி அலுவலராக பணி செய்து வரும் பூபாலன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று (அக்.18) திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநில கல்வித் துறை பிறப்பித்துள்ளது. பூபாலனுக்கு பதில் நெல்லை பொறுப்பு வட்டார கல்வி அலுவலராக முருகன் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

News October 19, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு இரண்டு தொழில் பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மூலம் கடந்த செப்டம்பர் 30 வரை சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழில் பிரிவுகளில் 100% பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தால் மேலும் வரும் அக்.30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

வன்கொடுமை குறித்த புகார்களை கூற தொலைபேசி எண்கள்

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டால் அது குறித்த புகார்களை 1800 2021 989 மற்றும் 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!