India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முன்னாள் அமைச்சரும் பத்மநாபபுரம் MLA மனோ தங்கராஜ் இன்று(அக்.18) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியது குறித்து கூறியிருப்பதாவது தூர்தர்சன் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்பது வேடிக்கை!தூர்தர்ஷனும் ஆளுநரும் சேர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டியது புண்படுத்தப்பட்ட தமிழ்நாடு மக்களிடம்! என்று அதில் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 18) நடத்திய சோதனையில் 73 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (18.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசாதாரண சம்பவங்கள் நடைபெற்றால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் இன்று இரவு 11.00 மணி முதல், நாளை காலை 6.00 மணி வரை ஆனந்தராஜ், DSP, AR, திண்டுக்கல் & மதுமதி DSP, கொடைக்கானல் S/D தலைமையில் காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி தபால் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் நிலையம் உட்பட 35 அஞ்சலகங்களில் ஆதார் சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி இம் மாதம் முழுவதும் இந்த அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை புதிய ஆதார் அட்டை திருத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் என்று தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை http://socialjustice.gov.in பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, “ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்” என தெரிவித்தார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், காவல் ஆணையர் அருண், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது போலியான தகவல் என தற்போது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் வசித்து வருபவர் கார்த்தி (23) இவர் அப்பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போக்சோ வழக்கில் கார்த்தியை இன்று போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் (SPCA) மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க மேலாண்மை குழு கூட்டம் இன்று (18.10.2024) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன.இதில் சேலம் ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி அபிநயா, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், ரூபாய் 50,000 பரிசுத் தொகையையும் வென்று அசத்தினார். மாணவி கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.