Tamilnadu

News October 18, 2024

செங்கல்பட்டு- காஞ்சிபுரம் சாலையில் திடீர் பள்ளம்

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லக்கூடிய சாலையில் ஐந்தடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலையின் குறுக்கே கால்வாய் செல்வதால் சிமெண்ட் கான்கிரிட் கொண்டு அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள், பதிவுத்துறை அலுவலகம் செல்லும் முக்கிய சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

News October 18, 2024

தருமபுரி கல்வி கடன் மற்றும் தொழில் கடன் வழங்கல்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற தொழிற்கடன் வசதியாக்கல் மற்றும் கல்விக் கடன் முகாமில் 24 நபர்களுக்கு ரூ.12.76 கோடி மதிப்பீட்டில் தொழிற்கடன் மற்றும் கல்வி கடன்களை மாவட்ட ஆட்சித்தலைவர், கி. சாந்தி வழங்கினார். உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

News October 18, 2024

கர்ப்பணிகளை பாதுகாக்கும் வம்சம் மையம்

image

நாகை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வம்சம் என்ற உதவி மையத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் உடனுக்குடன் செய்து தரப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 6 துரித நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

புதுகை மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

பொது விநியோகத் திட்டத்தின் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.  இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார். 

News October 18, 2024

நாளை சேலம் வரும் துணை முதல்வர் 

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை(19.10.24) தமிழகத்தின் துணை முதல்வர் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகிறார். அவரை தலைவாசல் டோல்கேட்டில் உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர்.வி. ஸ்ரீராம் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.

News October 18, 2024

திண்டுக்கல்: திடீரென பற்றி எரிந்த ஜெனரேட்டர் 

image

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பஜார் தெருவில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் மாடியில் உள்ள ஜெனரேட்டர் இன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில் நத்தம் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. .

News October 18, 2024

மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து டிக்கெட் வசதி

image

சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பயணம் செய்ய என் சி எம் சி (National Common Mobility Card) என்ற ஒற்றை பயண அட்டையைப் பயன்படுத்தும் வசதியை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை விரைவில் அமல்படுத்தப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 18, 2024

திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

image

காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

News October 18, 2024

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

image

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு போனஸ் அறிவித்தது. புதுச்சேரி அரசு சார்பில் மொத்தமாக 23,000 அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும். உற்பத்தி சாராத அரசு ஊழியர்கள் தலா ரூ.7000-த்திற்கு மிகாமல் அவர்கள் போனஸ் பெறுவர் என்று முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.

News October 18, 2024

ராமநாதபுரம்: மாற்றுதிறன் குழந்தைகளுக்கான முகாம்

image

ராமநாதபுரம் தொண்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அளவீட்டு முகாம் இன்று(அக்.18) நடைபெற்றது. இதில் முட நீக்கியல் மனநலம் காது மூக்கு தொண்டை கண் மருத்துவர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து உபகரணங்கள் தேவை குறித்து வழிகாட்டினர். 78 மாணவர் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

error: Content is protected !!