Tamilnadu

News October 18, 2024

மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து டிக்கெட் வசதி

image

சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பயணம் செய்ய என் சி எம் சி (National Common Mobility Card) என்ற ஒற்றை பயண அட்டையைப் பயன்படுத்தும் வசதியை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை விரைவில் அமல்படுத்தப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 18, 2024

திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

image

காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

News October 18, 2024

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

image

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு போனஸ் அறிவித்தது. புதுச்சேரி அரசு சார்பில் மொத்தமாக 23,000 அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும். உற்பத்தி சாராத அரசு ஊழியர்கள் தலா ரூ.7000-த்திற்கு மிகாமல் அவர்கள் போனஸ் பெறுவர் என்று முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.

News October 18, 2024

ராமநாதபுரம்: மாற்றுதிறன் குழந்தைகளுக்கான முகாம்

image

ராமநாதபுரம் தொண்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அளவீட்டு முகாம் இன்று(அக்.18) நடைபெற்றது. இதில் முட நீக்கியல் மனநலம் காது மூக்கு தொண்டை கண் மருத்துவர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து உபகரணங்கள் தேவை குறித்து வழிகாட்டினர். 78 மாணவர் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

News October 18, 2024

ஐந்து இடங்களில் உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு

image

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக துணை முதல்வருக்கு மணலூர்பேட்டை, மணம்பூண்டி கூட்டுரோடு, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி டோல்கேட், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட ஐந்து இடங்களில் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 18, 2024

தர்மபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

image

தமிழ்நாட்டில் அக்டோபர் 18, இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், போன்ற 16 மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் வருகின்ற 20 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை நவ.15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News October 18, 2024

குமரியில் பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

image

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 19.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (இன்று அக்டோபர் 18) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 18, 2024

திருவள்ளூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் சென்னை தேசிய நெடுஞ்சாலை 716 சாலை பணிக்காக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து இன்று மருத்துவக் கல்லூரி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இழப்பீடு தொகை உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!