India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், ஐப்பசி மாதப்பிறப்பு மற்றும் பௌர்ணமியையொட்டி காமாட்சி அம்மன், சரஸ்வதி தேவியருடன் தங்கத்தேரில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கத்தேர் ஆலயத்தை வலம் வந்த பின்னர், கோயில் நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.19) நடக்கிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 வயதில் இருந்து 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபலாரும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
புதுவை சென்டாக் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.டெக்., பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டபடிப்புகள், கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்பு விண்ணப்பிக்காத மாணவர்கள் சென்டாக் இணையதளம் மூலம் நாளை 19ம் தேதி மதியம் 2:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
கோவை மாவட்டத்தில் இன்று (18.10.24) பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, செல்லப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், சோமனூர், கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையத்தில் உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதுகலை பட்டம் பயின்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் தங்களது அசல் மற்றும் ஜெராக்ஸ் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு முதல் திடீரென மழை பெய்து வருகிறது. பகலில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு சுமார் 2.25 மணி முதல் அம்பத்தூர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை, வடபழனி, சோழிங்கநல்லூர், OMR சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை கரையை கடந்தது.
பேரளம் அருகே காரைக்கால் – பெங்களூரு செல்லும் ரயில் நேற்று காலை 6 மணிக்கு கொத்தவாசல் என்ற இடத்தில் சென்றபோது, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த என்ஜின் டிரைவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேம்பத்தூர் காலனியை சேர்ந்தவர் எட்வின்ராஜ். இவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கனகசபாபதி என்பவர் ரூ.6 லட்சம் வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுக்காததால் பணத்தை கேட்ட போது இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். அந்த காசோலையில் வங்கியில் பணம் இல்லாததால் பணத்தை எட்வின்ராஜ் திருப்பி கேட்டபோது அவரையும் ஜெகன் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டாறு போலீசார் நேற்று வழக்கு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ (பிரிலிம்ஸ்) போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை https://forms.gle/13skgPbY9TZk5Zf18 என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கடலூர் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திட்டக்குடி, பி முட்லூர், செம்மங்குப்பம் , பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருதாச்சலம், காட்டுமன்னார்கோயில், பரங்கிப்பேட்டை, ஆலப்பாக்கம், எறையூர், கருங்குழி, மேலப்பாளையம், புவனகிரி, நெல்லிக்குப்பம், கிள்ளை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.