Tamilnadu

News October 18, 2024

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை

image

கிள்ளை அடுத்த பொன்னன் திட்டு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தொழிலாளி வீரமணி (32). இவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன வருத்தத்தில் கடந்த சில நாட்களாக இருந்தார். இந்த நிலையில் இன்று காலை வீரமணி தனது வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 18, 2024

மாவட்ட காஜி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி, முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக உள்ள மாவட்ட காஜியின் பதிவிகாலம் 2023ஆம் ஆண்டே முடிவடைந்தது. தற்போது புதிய காஜி நியமிக்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பத்தை அக்.30ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு ஊட்டி பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை(19.10.24) நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு (ம) மாற்றம் செய்தல் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே திருப்பூர் மக்களே மிஸ் பண்ணிடாமா SHARE பண்ணுங்க.

News October 18, 2024

ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

image

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

News October 18, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்ச்சி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

News October 18, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 18, 2024

தருமபுரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

News October 18, 2024

விராலூர் ஊராட்சியில் மழையினால் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது

image

விராலூர் ஊராட்சியில் வெற்றிக்காடு கிராமத்தில் கனமழை பெய்தால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும், இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளன.

News October 18, 2024

தி.மலைக்கு துணை முதல்வர் இன்று வருகை

image

துணை முதல்வரான பிறகு முதல் முறையாக இன்று (அக்.18) மாலை திருவண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகிறாா். மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.

News October 18, 2024

அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், 19ம் தேதி காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில பொதுமக்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!