Tamilnadu

News October 18, 2024

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருவையாறு, கரந்தை, மேலதிருப்பூந்துருத்தி, நாஞ்சிக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.19) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், ஆவிக்கரை, கண்டியூர், செங்கமேடு, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, செம்மங்குடி, கரந்தை, அரண்மனை, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், இபி காலனி உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News October 18, 2024

நியோமேக்ஸ் சொத்துக்களை முடக்க உத்தரவு

image

ரூ.6,000 கோடி மோசடி செய்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை நாளைக்குள் (அக்.19) முடக்குவதற்கான அரசாணை வெளியிடாவிட்டால், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. மேலும் சொத்துகளை முடக்குவதற்கான அரசாணை பிறப்பிக்க ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனியும் அவகாசம் அளிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News October 18, 2024

மத்திய அரசின் திறன் மேம்பாடு பயிற்சி

image

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் பிரதமர் PMKVY4.0 முன்னோடி பயிற்சி திட்டத்தின் கீழ் உற்பத்தி மேற்பார்வையாளர் 720 மணி நேரம் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையம் முதல்வர் 04342 266601, 9940830290 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

பழைய காவல் குடியிருப்பில் வெடித்த மர்மபொருள்!

image

மாமல்லபுரம் பழைய காவலர் குடியிருப்பு அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில், பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் ஒன்று நேற்றிரவு வெடித்தது. இதில், கட்டிடத்தின் சுவர் இடிந்த நிலையில், மர்ம பொருள் வெடித்த அதிர்வினால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News October 18, 2024

மதுரையில் வி.கே.குருசாமி வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்

image

மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் கீரைத்துறை வீட்டில், கீரைத்துறை காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது நாட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் வீ.கே.ஜி மணியின் நண்பர்களான பழனிமுருகன் மற்றும் முனியசாமி ஆகியோர் குருசாமி வீட்டில் நாட்டு துப்பாக்கியுடன் இருந்தபோது காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.

News October 18, 2024

அக்.24 வரை பேருந்து மாதாந்திர பயணச் சீட்டு பெறலாம்

image

சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயணச்சீட்டு அக்.24 வரை பெறலாம் என இன்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் போக்குவரத்து கழகத்தில் செயல்படும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் பயண சீட்டு பெறலாம் என சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதை SHARE செய்யவும்.

News October 18, 2024

இணையவழி முகவரியின் வாயிலாக மேற்கொள்ள தகவல்

image

சிவகங்கை மாவட்டம் பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள, கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, அறிவிப்பு மற்றும் திருத்தங்களை https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

பல்லடம் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான Under 18 பிரிவு கால்பந்துப் போட்டியில், பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் முதலிடம் பிடித்த மாணவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

News October 18, 2024

பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்
பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

பருவ மழை : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் கால்நடை வளர்ப்போர் மின் கம்பங்களிலோ, மின் கம்பங்களுக்கு அருகாமையிலோ கால்நடைகளை கட்ட கூடாது, கால்நடைகள் கட்டும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கால்நடை அவசர ஊர்தியின் சேவையை பெற 1962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!