Tamilnadu

News October 17, 2024

அமராவதி ஆற்றில் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் தனியார் உணவக டெலிவரி வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் இன்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 17, 2024

நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தினமும் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(அக்.,17) துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ் தலைமையில் காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவிக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News October 17, 2024

கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

image

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் பெளர்ணமியன்று நடைபெறும் சிறப்பு பெற்ற விழாவான ஐந்து கருடசேவை இன்று(அக்.,17) கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

News October 17, 2024

தென்காசியில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

image

தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மதிப்பீட்டு குழு தலைவர் உள்ளிட்ட குழுவினர் தென்காசி மாவட்டத்தில் 24.10.2024 அன்று கால ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், பொதுமக்கள் குறைகள் குறித்து மனுக்கள் வழங்கவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 17, 2024

பாப்பிரெட்டிப்பட்டியில் கார் மோதி விபத்து: ஒருவர் பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி சேலம் செல்லும் வழியில் தனியார் கிழங்கு மில் அருகில் மில்லில் கிழங்கு இறக்கி விட்டு சென்ற லாரியும், காரும் மோதியதில் கார் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த கம்பைநல்லூர் சவுளூர் பகுதியைச் சேர்ந்த முரளி (35) பலியானார். பாப்பிரெட்டிப்பட்டி ராஜேந்திரன் மகன் ராஜேஸ் (எ) விக்னேஷ் (30) படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News October 17, 2024

கதிருப்பத்தூர், இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்றதிலிருந்து மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (17.10.2024) குருசிலாபட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி, கந்திலி, பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News October 17, 2024

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

News October 17, 2024

ராம்நாட்டில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதுகலை பட்டம் பயின்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் தங்களது அசல் மற்றும் ஜெராக்ஸ் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

மேலப்பாளையத்தில் தொடர் விபத்து! மக்கள் புகார்

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இன்று(அக்.,17) லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்‌. மேலும் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர்‌.

News October 17, 2024

கரூர் விவசாயிகளுக்கு கடன் ஆட்சியர் அறிவிப்பு

image

மாவட்ட அளவிலான அனைத்து இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர் 60% ,சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி திறன் அடிப்படையில் 40% என இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்படும். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் ddab.karur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!