India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை: மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, கனமழை எச்சரிக்கை, லேசான மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் நேற்று, இன்று (அக்.16, 17) உள்ளிட்ட இரு தினங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவற்றதால் நாளை (அக்.18) முதல் மலை ரயில் மீண்டும் இயங்கும் என தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்கும் விதமாக இன்று (அக்டோபர் 17) மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 88 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம்(அக்.,17) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் (காதுகேளாதவர்கள்) ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள வரும் அக்டோபர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதார் உடன் இணைந்த அலைபேசியுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு பணியில் இருக்கக்கூடிய காவலர்களின் தொடர்பான தொலைபேசி எண்ணை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஏதேனும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
குமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் உரிமைகள் துறை சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்து கொண்டு ஆதரவற்ற மற்றும் கைம்பெண்கள் தொழில் தொடங்குவதற்கான மானியம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழையின்போது தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை உரிய நடைமுறையில் பாதுகாக்க வேண்டும். எடையை குறைக்க கிளைகளை கவர்ச்சி செய்ய வேண்டும். செடிகள் காற்றில் பாதிக்காதபடி தாங்கு குச்சிகளை வைத்து கட்ட வேண்டும். காய்கறி பயிர்கள் அதிக நீர் தேங்கா வண்ணம் வடிகால் வசதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேவர் குருபூஜை மற்றும் மருது சகோதரர்கள் குருபூஜைக்கான ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகா சபை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஊட்டி புறநகர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ பாபு நேற்று இரவு எம்.பாலாடா பிரிவில் (TN-01-U-4065) எண் கொண்ட காரை தடுத்து சோதனை செய்தார். அப்போது காரில் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு பெரிய கத்தி, 6 சிறிய கத்திகள், 2 (HEAD-LIGHT), ஒரு பண்டல் பாலிதீன் கவர் போன்றவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் பயணித்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வன சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் தனியார் உணவக டெலிவரி வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் இன்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.