India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் முதலீட்டுத் தொகையில் 40% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயன் அடைய விரும்புபவர்கள் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE NOW
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 19ஆம் தேதி மதியம் 3 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், முதன்முறையாக துணை முதல்வராக பதவியேற்ற பின் கள்ளக்குறிச்சி வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.
நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து 19.10.2024 அன்று நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியர் அலுவலகத்தில், நாகை ஆட்சியர் ப.ஆகாஷ் இன்று வழங்கினார். அவருடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திக்கேயன் உடனிருந்தார்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலையின்றி உள்ள இளைஞர்களிடமிருந்து 01.10.2024 காலாண்டிற்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். டிசம்பர் 10ஆம் தேதிக்குள்ள விண்ணபிக்க வேண்டும்.
தூத்துக்குடி சிவந்தா குளம் சாலை பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 13ஆம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து எங்கிருந்தோ விழும் கற்களால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்தக் கல் வீச்சு சம்பவத்தில் செல்வராஜ் என்பவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த ஜெர்வீன் என்பவர் அளித்த புகாரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் “வாகனங்களை ஓட்டும்போது செல்லிடப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதன் மூலம் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் சட்ட விரோதமாக பட்டாசுகள் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க விருதுநகர் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் செல்வி தலைமையில் சிறப்பு தனி படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவல்துறையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதிமுகவின் மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், திமுக அரசு சென்னையில் கார் ரேஸ் நடத்த காட்டிய அக்கறையில் 50 சதவீதம் கூட மழை நீர் வடிகால் அமைத்து மக்களை பாதுகாப்பதில்லை. அப்படி செய்திருந்தால் மக்களை மழை பாதிப்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். மக்களுக்கு இல்லம் தேடி கல்விக்கு பதிலாக மழை வெள்ளம் வந்துவிட்டது என்று விமர்சனம் செய்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அக்.,23ஆம் தேதி புளியரை சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளதாக, இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
கரூரில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கூடுதல் விபரங்கள் பெற்றிட நேஷனல் (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (National Scholarship portal)லில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்தார்.
Sorry, no posts matched your criteria.