India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும்.
இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தை சேர்ந்த, யோகா ஸ்கேட்டிங் மூலம் பல்வேறு பதக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய சகோதரிகள் மிஸ்பா நூருல், ஹபீபா ஷாஜிதா ஆகியோருக்கு கடந்த வாரம் சென்னையில் அமைச்சர் முத்துசாமி சாதனையாளர் விருது வழங்கினார். தொடர்ந்து இன்று(அக்.,17) தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவ பத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “விழுப்புரம் மாவட்டத்தில் கொந்தமூர் மற்றும் நல்லாவூர் கிராமப்பகுதியில் புதிய மதுபானக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். முடிவை கைவிடாவிட்டால் நானே என் தலைமையில் அரசு மதுபானக்கடைகளுக்கு பூட்டுபோட்டு போராட்டம் நடத்துவேன்” என்று தெரிவித்தார்.
முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சென்னையில் மழையால் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி. அதேநேரம், அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு சதவீதம் நிறைவடைந்துள்ளது? ரூ.4 ஆயிரம் கோடியில் எவ்வளவு சதவீதம் செலவாகி உள்ளது? என்ற தகவல்கள் முழுமையாக இல்லை” என்று தெரிவித்தார்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று(அக்.,17) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் 50% or ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவோ அது அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இது குறித்த கூட்டம் 21ஆம் தேதி பிற்பகல் 5:30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து அக்.,19 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். SHARE IT.
அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி இன்று சேலம் வந்தார் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக இதே நிலை நீடித்தால் அடுத்து வரும் தேர்தலில் சேலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி அக்டோபர் 22ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியிலும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், இராணி மேரி கல்லூரியிலும் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 ரூ.3,000 மற்றும் ரூ.2,000 பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(அக்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.