Tamilnadu

News October 17, 2024

கொடிவேரி அணைக்கு செல்ல 3ஆவது நாளாக தடை

image

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இன்று (17.10.2024) பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று (17.10.2024) சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கட்டில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 17, 2024

சிவன் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

image

தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம் பிரியாள் அம்மாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வரும் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 27ஆம் தேதியும், திருக்கல்யாணம் 29ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

News October 17, 2024

தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மத்திய, மாநில அரசு திட்டங்களின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். காலையில், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும், தொடர்ந்து வளர்ச்சி பணிகளும் ஆய்வு செய்ய உள்ளனர் என ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

News October 17, 2024

கலைஞர் அறிவாலயம் அமைக்க குழு நியமனம்-ராஜா எம்எல்ஏ

image

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிவகிரி கலைஞர் அறிவாலயம் கட்டிட குழுவின் தலைவர், தீர்மான குழு உறுப்பினர் சரவணன், நிதி குழு உறுப்பினர்கள் சீனிவாசன், டாக்டர். செண்பக விநாயகம் (மாநில மருத்துவ அணி துணை செயலாளர்), பொன்முத்தையா பாண்டியன் (வாசு ஒன்றிய பெருந்தலைவர்) உள்ளிட்ட 15 பேரை நியமனம் செய்து” அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News October 17, 2024

ஜியோ நிறுவன அதிகாரி வீட்டில் ஐ.டி. சோதனை

image

கோவிலம்பாக்கத்தில் உள்ள சோபா அடுக்குமாடி குடியிருப்பில், மது என்பவர் தங்கியுள்ளார். இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இரு சோதனை நடத்தி வருகின்றனர். இவர், ஜியோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், வருமான வரி செலுத்துவதில் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 7:20 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் தீவிர சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

News October 17, 2024

திருவெண்ணெய்நல்லூரில் நாளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை செயல்படுத்திட நாளை (அக்.18) அனைத்து கிராமங்களிலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்துதுறை உயர் அலுவலர்கள் பல்வேறு கிராமங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுசேவைகள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்கிறார்.

News October 17, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம், மன வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் உள்ளிட்ட அனைத்து இல்லங்களும் சம்பந்தப்பட்ட துறைகளில் பதிவு செய்யப்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்யாத இல்லங்களுக்கு பதிவு செய்ய 1 மாதம் அவகாசம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

News October 17, 2024

புதுவை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுவை சென்டாக்கில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க உள்ளது. அப்போது ஜிப்மரில் இடம் கிடைத்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மாணவர்கள் தெரிவிக்கலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று தெரிவித்தார். ஷேர் செய்யவும்

News October 17, 2024

உஷார் நிலையில் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று அறிவுறுத்தியுள்ளார்.

News October 17, 2024

சென்னையில் அனைத்து பள்ளிகளும் இயங்குகின்றன

image

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை மையம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும், அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!