India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலை பண்பாட்டு துறை சார்பில் சிறுவர்கள் இடையே குரலிசை, பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 கலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் விளாப்பாக்கம், ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அக்.20ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 04427269148, 9751152828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
இரட்டைமதகடியில் உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலின் படி கீழ்வேளூர் போலீசார் அந்த கடையில் சோதனை செய்ததில் ரூ. 6ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கீழ்வேளூர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேவூர்- இருக்கை சாலையை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
விருதுநகர் நகராட்சி ஆணையாளர் சுகந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-25ம் வருட இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகம் மற்றும் கணினி வரி வசூல் மையத்தில் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ செலுத்தலாம். அக்.31ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு வரியில் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாலை இரண்டு மணி அளவில் 12 ஆண்டுகளாக காணாமல் போன பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அணிலா தேவி கடந்த ஏழு ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதவும் உள்ளங்கள் காப்பகத்தில் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரை அடையாளம் கண்டு இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம் செக் போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத சுமார் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து சடலமாக கிடந்துள்ளார். காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நடந்து செல்லும் போது நேற்று மாலை இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கல்லாவி காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறி சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – கோமலவள்ளி( 8610270472), திருச்செங்கோடு -தவமணி (9443736199), வேலூர் – செல்வராஜ் (9498153088) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் பிற துறையினர் அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது மற்றும் மிரட்டல் மற்றும் அச்சுறுத்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது விநியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(அக் 18) தருமபுரி எம்பிளாய்மென்ட் ஆபிஸில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, டிகிரி படித்தவர்கள் (HTTPS://WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN) என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி நேற்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.