India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதுகலை பட்டம் பயின்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் தங்களது அசல் மற்றும் ஜெராக்ஸ் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இன்று(அக்.,17) லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
மாவட்ட அளவிலான அனைத்து இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர் 60% ,சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி திறன் அடிப்படையில் 40% என இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்படும். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் ddab.karur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வேளாண்மை துணை இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொள்ளிடம் அருகே பழையபாளையம், சொசைட்டி தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (70). பம்பு பிட்டராக வேலை பார்த்துவந்த இவர் குடும்ப பிரச்சினை காரணமாக இன்று கொள்ளிடம் சோதனை சாவடி அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்திவிட்டு உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
மாமன்னர் மருது பாண்டியர் நினைவு நாள், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகள் தொடர்பாக மதுரை நகரிலும், மதுரை மாவட்டத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
செஞ்சி தொகுதி திமுக தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் தொகுதி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் இன்று (அக்.17) செஞ்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், திமுக மாவட்ட பொருளாளர் சேகர் உட்பட ஒன்றிய நகர பொது குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 2026 தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன், தர்மபுரி எம்பி ஆ.மணி, தொகுதி மேற்பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரம் சென்றுவிட்டு இன்று(அக்.,17) பத்மநாபபுரம் திரும்பி வந்தன. அப்போது, பத்மநாபபுரம் நகர எல்லையில் சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம், சுரண்டை மார்க்கத்தில் மினி பேருந்துகள் தனியார் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக செல்லும் தனியார் மினி பேருந்தில் புதிதாக அறிவிப்பு ஒன்றை பேருந்தில் முன் பகுதியில் ஒட்டியுள்ளனர். அதில் ‘மதுக்கூடம் நிறுத்தம்’ என டாஸ்மாக் கடை ஸ்டாப் உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அளித்த பேட்டியில், “நேற்று வரை குறை கூறிக் கொண்டு இருந்த ஆளுநர் இன்று வானளவு பாராட்டிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பின் கதையே மாறிவிட்டது” என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.