Tamilnadu

News October 18, 2024

ரயில்களில் சோதனை – ரூ.48.61 லட்சம் அபராதம் வசூல்

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் வழியாக இயக்கப்பட்ட ரயில்களில் ரயில்வே துறை அதிகாரிகள் சார்பில் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி அக்.1 முதல் 15 ஆம் தேதி வரை 15 நாள்களில் சேலம் ரயில்வே கோட்டத்தில் மொத்தம் ரூ.48,61,055 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 18, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்லவும். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

News October 18, 2024

கரூரில் சீர்மரபினர் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

image

கரூரில் சீர்மரபினர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான முகாம் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 18, 2024

டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் வாகனங்களுக்கு முன்கூட்டியே பாஸ் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டிஜிபி, ராமநாதபுரம் ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களுக்கான பாஸ் தாமதமாகவே வழங்கப்படுவதால் பெரும்பாலானோர் பசும்பொன்னில் மரியாதை செலுத்த முடியாமல் போவதால் ஒரு வாரத்திற்கு முன் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவில் உத்தரவிட்டுள்ளது.

News October 18, 2024

பெரம்பலூரில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் குறைதீா்க்கும் முகாம் நாளை (அக். 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த முகாமில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காணலாம்.

News October 18, 2024

முன்னாள் படை வீரா்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீா்வு முகாம்

image

புதுவையில் அக்.21-ஆம் தேதி முன்னாள் படை வீரா்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த
முகாமில் பங்கேற்க விரும்பும் முன்னாள் படை வீரா்கள் & குடும்பத்தினா் தங்களது படை பணிச் சான்றிதழ், அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதாா் அட்டை, பான் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

News October 18, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: ஆட்சியர்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்று பகல் நேரங்களில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு முதல் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. தற்போது, சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் கொண்டு செல்ல்லுங்கள்.

News October 18, 2024

திருவள்ளூரில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News October 18, 2024

தேனியில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை(அக்.19) பொதுவிநியோகம் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் அந்தந்தப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கடை மாற்றம், நியாய விலை கடைகளின் குறைபாடுகள் உள்ளிட்டவைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை

image

கிள்ளை அடுத்த பொன்னன் திட்டு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தொழிலாளி வீரமணி (32). இவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன வருத்தத்தில் கடந்த சில நாட்களாக இருந்தார். இந்த நிலையில் இன்று காலை வீரமணி தனது வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!