India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் – கோவை ரயிலில் நடுப்பக்க படுக்கையை சங்கிலியால் இணைக்க முயன்ற போது கீழ்ப்பக்க படுக்கையில் படுத்திருந்த சிறுவன் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ரயில் பயணிகள் நடுப்பக்க படுக்கையை சங்கிலியை இணைக்கும் போது மிகுந்த கவனத்துடனும் சக பயணிகளின் உதவியோடு படுக்கையை இணைத்து பாதிப்பில்லா பயணத்தை மேற்கொள்ள தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி, சின்னவாய்க்கால் வீதியை சேர்ந்தவர் பாபு அப்துல் ரகுமான். இவரது மனைவி சர்மிளா. இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், சர்மிளாவை பாபு அப்துல் ரகுமான் தாக்கினார்.இதுகுறித்து சரமிளா கொடுத்த புகாரின் பேரில், பாபு அப்துல் ரகுமான் மீது, ஒதியஞ்சாலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அவசர பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத்துறை சிறப்பு பொறுப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படிநெல்லை மாவட்டத்திற்கு நீர்வளத்துறை திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் மகேஸ்வரி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
நாகூரில் இருந்து மதுரை வழியாக இயங்கி வந்த கொல்லம் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து மதுரைக்கு தினசரி இயங்கும் வகையில் புதிய வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என நாகை ரயில் உபயோகிப்பாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 10 மணி வரை கடலூர் மாவட்டத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்திலுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் சனிக்கிழமை (அக்.19) ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொடங்கப்படவுள்ளது. என இந்த மையத்தின் மதியுரைஞா் வெ. சுகுமாரன் தெரிவித்துள்ளாா்.
காஞ்சி மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கரும்பு சாகுபடியில் நல்ல விலை இல்லாத காரணத்தினாலும், இடுபொருட்கள் விலை அதிகமாக உள்ளதாலும், தென்னையிலும், வேளாண் சமவெளிப் காடுகளில் மிளகு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மிளகு சாகுபடி செய்ய காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நிலுவையில் உள்ளதால், மிளகு சாகுபடிக்கு காலதாமதமின்றி செடிகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை சிப்காட், முக்கணாமலைப்பட்டி, கீரனூர், அன்னவாாசல் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (அக்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சிப்காட் நகர், பாலன் நகர், தைலா நகர், சிட்கோ, காயாம்பட்டி, அன்னவாசல், கீீரனூர், முக்கணாமலைப்பட்டி, வீரப்பட்டி உள்ளிட்ட பிற பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
குமரி நாடாளுமன்றஉறுப்பினர் விஜய் வசந்த் இன்று(அக்.,18) மாலை 3:30 மணிக்கு கருங்கல் தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நெடிய விளாகம், செல்லங்கோணம், வட்டவிளை, சரல்கோட்டை, கஞ்சி குழி, முருங்க விளை, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, வெள்ளிக்கோடு, கல்லுவிளை, காடு வெட்டி வழியாக சென்று அழகிய மண்டபத்தில் நிறைவு செய்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். நேற்று பகல் நேரங்களில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு முதல் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. அம்பத்தூர் ஆவடி , மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் கொண்டு செல்ல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.