India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு பேசும்போது, தமிழக வெற்றி கழகத்தில் பதவி நிரந்தரமானது அல்ல. எதிர்பார்ப்பு இல்லாமல் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும் என தெரிவித்தார். மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
சென்னை மாநகர ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜரான ஆணையர் அருண், எனது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை. யாரையும் மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை” என்றார்.
ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா (30), செல்போன் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 16ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், குடல்கள் போன்ற உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. கோட்டாட்சியர் தலைமையில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்து 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை மாலை வேலைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று(அக்.,18) ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவி கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அச்சிறுபாக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில், 20,000 மரக்கன்றுகள் கடந்த மே மாதம் நடப்பட்டன. ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்டவற்றை, அச்சிறுபாக்கத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இலவசமாக மரக்கன்றுகளைப் பெற்றுச் செல்லலாம். 1 ஏக்கர் நிலத்திற்கு, 200 மரக்கன்றுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேர் பண்ணுங்க
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 40க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்றனர். இந்த முகாமினை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகாச்சலம் தொடங்கி வைத்தார். தேர்வாகும் நபர்களின் விபரம் விரைவில் வெளியாகும்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கையாக அக்.16, 17 ஆகிய தேதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சியில் பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் இவரது கூட்டாளிகளான பாலசுப்பிரமணியன், சமயபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், அருண், ராமு, லட்சுமணன், வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், கார்த்திக் ஆகிய 9 பேரை சமயபுரம் போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 வீச்சருவாள்கள் 28 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீலகிரி, துணை வட்டார பதவிக்கு (Deputy area Commander) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு கடைசி தேதி அக்.31ஆம் ஆகும். 21 வயது முதல் 50 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை காவல் கண்காணிப்பாளர், நீலகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது கவுரவப்பதவி ஆகவே, ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.