Tamilnadu

News October 18, 2024

நாமக்கல்லுக்கு வருகின்ற 22 ஆம் தேதி முதல்வர் வருகை

image

நாமக்கல் மாநகராட்சி பகுதிக்கு வருகின்ற 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். முதல் நிகழ்ச்சியாக பரமத்தி சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதலைப்பட்டி புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டப மைதானத்தில் முதலமைச்சர் சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

News October 18, 2024

அர்ஜுன் சம்பத்தை கைது செய்க: நெல்லை முபாரக்

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று(அக்.,18) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டும். மேலும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 18, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு, கணினி திறன்கள் முடித்திருக்க வேண்டும். அவர்கள் வரும் 21 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார.

News October 18, 2024

சாம்சங் தொழிற்சாலை சங்கம் வழக்கு

image

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்வதை மறுத்து வந்த தமிழக தொழிலாளர் துறைக்கு எதிராக, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் சிஐடியு உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நேற்று 34ஆவது வழக்காக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நடைபெற்ற நிலையில், சி.ஐ.டி.யூ. வழக்கு வரும் 22ஆம் தேதி பிற்பகலில் எடுத்துக் கொள்வதாக நமது வழக்கறிஞர்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News October 18, 2024

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (அக்.19) மின் குறைதீர் முகாம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்க விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா,(அக். 19) அன்று 11 மணி முதல் 1 மணி வரை ஸ்ரீவி., கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைகளை கேட்டறிய உள்ளார் என ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் சு.முனியசாமி தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

image

திரும்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் மழைக்காலங்களில் “மின் கம்பங்களுக்கு அருகிலோ அல்லது பழைய கட்டிடங்களின் அடியிலோ நிற்பதை தவிர்க்க வேண்டும் ” என மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

News October 18, 2024

தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

image

மயிலாடுதுறையில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள இடத்தில் தான் ஜடாயு குண்டம் உள்ளது. ஜடாயுவுக்கு ராமர் இங்குதான் இறுதி காரியம் செய்ததாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது செவ்வாய் ஸ்தலமாக உள்ளது. அங்காரகனின் செங்குஷ்டநோயைத் தீர்த்தபடியால் அங்காரகத் தலமாகின்றது. இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

News October 18, 2024

ஜவுளி பூங்கா அமைக்க ஆலோசனை: குமரி கலெக்டர்

image

குமரி மாவட்டத்தில் 2 ஏக்கர் பரப்பில் 3 ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் 22ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் ஜவுளி தொழில் செய்வோர் வலயம் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 18, 2024

சுப.வீரபாண்டியனுக்கு தென்காசியில் வரவேற்பு

image

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று(அக்.,19) வருகை தந்த திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சமூகநீதி கண்காணிப்புக்குழு சுப.வீரபாண்டியனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

News October 18, 2024

ஒன்றிய அரசு செய்யும் துரோகத்தின் இன்னொரு சாட்சியம்

image

2023 பட்ஜெட்டில் செயற்கை அறிவூட்ட மேம்பாட்டுக்காக 3 “சீர்மிகு நிறுவனங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தேர்வில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களின் உயர் கல்வி நிலையங்கள் விண்ணப்பித்து போட்டி போட்டும் உத்தரபிரதேசம், பஞ்சாப், டெல்லி ஆகிய ஐ.ஐ.டி கள் தேர்வு பெற்றுள்ளன. தென்மாநிலங்களிலிருந்து ஒரு உயர்கல்வி நிறுவனம்கூட தேர்வு பெறாதது ஐயங்களை உருவாக்குவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!