Tamilnadu

News October 18, 2024

போலியான அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் “நான் காவல்துறையிலிருந்து அழைக்கிறேன். உங்கள் பார்சல் கைப்பற்றப்பட்டது. அதில் போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தோம்” என பொதுமக்கள் தங்கள் தொலைபேசிக்கு வரும் போலியான அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான அழைப்புகளை தவிர்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News October 18, 2024

தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.

image

தென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவித்த காலை 6-7 மாலை 7-8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்;. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் என ஆட்சியர் கமல்கிஷோர் இன்று 18ம் தேதி அறிவிப்பு.

News October 18, 2024

திருவள்ளூர் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. எனவே பொதுமக்கள் நீர்நிலை பகுதிகளில் செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

News October 18, 2024

அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சிறு அரசு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட காலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News October 18, 2024

வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 18) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

News October 18, 2024

சென்னை காவலர் கீழே விழுந்து உயிரிழப்பு

image

சென்னையில் 11 வது மாடியில் இருந்து கீழே விழுந்து காவலர் பலியாகியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஆர் ஆர் போலீஸ் ஸ்டேடியம் குடியிருப்பில் எலக்ட்ரிஷன் ஒர்க் செய்து கொண்டிருந்த போது 11ஆவது அடுக்குமாடி குடியிருப்பு மேலிருந்து தவறுதலாக கீழே இருந்த கார் மீது காவலர் செல்வகுமார் விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 18, 2024

தஞ்சையில் கைவினை பொருள் பயிற்சி வகுப்பு

image

தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அருங்காட்சியக வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் தஞ்சாவூர் கைவினை பொருட்கள் ஒன்றான நெட்டி வேலைப்பாடு கைவினை பொருட்கள் பயிற்சி வகுப்பு நாளை 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி கட்டணம் ரூபாய் 100. முன்பதிவிற்கு httpd/thanjavurtourism.org என்ற இணையத்தை பயன்படுத்தவும்.

News October 18, 2024

கொள்ளிடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

image

கொள்ளிடம் அடுத்த ஆணைக்காரன் சத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுரேந்திரன் (27) என்பவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி சுரேந்திரனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி எஸ்பி அறிவுறுத்தலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று கைது செய்தனர்.

News October 18, 2024

கிருஷ்ணகிரியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை பொது விநியோக திட்டம் சம்மந்தமாக வட்ட வழங்கல் அலுவலரால் நடத்தப்படும் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய அளவில் சிறந்த விளையாட்டு 2 வீரர் மற்றும் 2 வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக ரூ1 லட்சம் மற்றும்10 ஆயிரம் மதிப்பிலான பதக்கங்கள் வழங்க உள்ளனர். இந்த விருதை பெற விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஆட்சியர் அறிவித்துள்ளார். 

error: Content is protected !!