India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2024-2025ஆம் ஆண்டிற்கு இறவை சாகுபடியில் 20 ஏக்கர், மானாவரி சாகுபடியில் 100 ஏக்கர் மற்றும் புல் நறுக்கும் கருவிகள் 40 அலகுகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி மருத்துவரை அணுகி விளக்கங்களை பெற்று 28ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதம் இன்றுடன் நிறைவடைந்தது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி முடிந்துள்ள நிலையில் முட்டையின் நுகர்வு சற்று அதிகரிக்க கூடும். இருப்பினும் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ரூ 5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (18.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் வழிமுறைகளை அளித்துள்ளது. அதன்படி, கால்நடைகளுக்கு நோய்தடுப்புசீகளை சரியாக செலுத்த வேண்டும். மழையின் போது கொட்டகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுதல், சுத்தமான குடிநீர், அடர்தீவனம் உள்ளிட்டவை சரியாக வழங்கப்பட வேண்டும் என்றும், மழைக்காலத்தில் இறக்கும் கால்நடைகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு எலக்ட்ரிகல் பஸ் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ் 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படுகிறது. முதல் முறையாக அறிமுக இந்த பஸ் இன்று(அக்.18) கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை முடியும் சீரோபாயிண்ட் பகுதிக்கு வந்தடைந்தது. இந்த பஸ்சை விஜய் வசந்த் எம்.பி தலைமையில் மாணவ மாணவிகள் வரவேற்றனர். இதில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோதுபின்னால் வந்த இருமர்ம நபர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மழையின் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா வரும் சனிக்கிழமை (19.10.2024) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.