India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் மீட்கப்பட்டதற்காக மீனவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு இன்று பெரம்பலூரில் நடக்கும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமுக்கு வருகை தந்த, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் நேரில் சென்று வரவேற்று மரியாதை செய்தார். பெரம்பலூரில் நடக்கும் இம்முகாமில் ஏராளமான இளைஞர்களும், தனியார் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம், நாங்கள் கேட்கிறோம், தூர்தர்ஷனில் மதபிரச்சார கருத்துக்களை ஒளிபரப்புவதற்கு ஈடாக, தினமும் மாலை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கருத்துக்களை ஒளிபரப்ப வேண்டும், ஒளிபரப்ப திராணி இருக்கிறதா? என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சில முக்கிய குற்றவாளிகளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கையில் இந்தியாவின் 27 மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தைப் பின்பற்றும் போது தமிழ்நாடு மட்டும் பின்பற்றவில்லை என்று ஆளுநர் ஆதங்கப்படுகிறார். இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம் எனவும், இன்னொரு தனித்துவமும் உண்டு, இதுவரையிலான 25 ஆளுநர்கள் போல் அல்லாமல் நீங்கள் மட்டும் சட்டத்தையும், தமிழ்நாட்டின் மாண்பையும் மதிக்கத்தவறுவதை சகித்துக்கொண்டிருப்பது என விமர்சனம் செய்துள்ளார்.
குழந்தை பிறந்து பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 2009ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய வரும் டிசம்பர் 31 கடைசி தேதியாகும். எனவே கோபி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் என கோபி நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, கோவை- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (03326) இன்று (அக்.19) மதியம் 12.55 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், 11 மணி 20 நிமிடங்கள் தாமதமாக நள்ளிரவு 12.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்; சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
காஞ்சிபுரம் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை, போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை, அனைத்து ரோட்டரி சங்கங்கள், இந்திய பல் மருத்துவ சங்கம் உள்ளிட்டவை இணைந்து, மாபெரும் இலவச இருதயம், பல், கண் பரிசோதனை மருத்துவ முகாம் நாளை (அக்.20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்பட உள்ளது. எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க
திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது புதிய பாம்பன் பாலம் தயார் நிலையில் உள்ளது. இதில் சமீபத்தில் கூட ரயில் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நவம்பர் 1 முதல் திருவனந்தபுரம் – மதுரை அம்ரிதா ரயில் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில், அதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அண்ணா தொடங்கிய திமுக இப்போது இல்லை. ஆனால், பவள விழா கொண்டாட்டம். 2026 தேர்தலில் எனக்கு சீட்டு தருவார்களோ, மாட்டார்களோ என அமைச்சர் பொன்முடி பேசும் அளவிற்கு திமுகவின் நிலவரம் கலவரமாக உள்ளது” என பேசியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.