India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கை: தீபாவளியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளையே உற்பத்தி செய்து விற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். தீபாவளி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு, 7 முதல், 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்திலிருந்து, உள்நாட்டு முனையத்திற்கு டிரான்சிட் பயணிகள் வரும் வழியில் உள்ள 7 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், அந்த வழியை மூடிவிட்டு, பயணிகளை வேறு வழியாக அனுப்பி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைவது, தொடர்ந்து வருவதால் பரபரப்பு உள்ளது.
செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது நீர் இருப்பு 13.97 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, தண்ணீரின் அளவு 1.348 டி.எம்.சி.யாக உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
குடிமை பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இது பற்றி பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க அரசு தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ் அப் எண்ணாக 9677736557 என்ற எண்களை அரசு வெளியிட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 0.0 மில்லி மீட்டர், வானூர் 3 மில்லி மீட்டர், மரக்காணம் 35 மில்லி மீட்டர், செஞ்சி 24 மில்லி மீட்டர், செம்மேடு 2.80 மில்லி மீட்டர், வல்லம் 6 மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 82 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 0.0 மில்லி மீட்டர், வளத்தி 6 மில்லி மீட்டர். சராசரியாக 7.28 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மீட்பு பணியில் ஈடுபட உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்களையும் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கரூர் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குவது சட்டப்படி குற்றம். படிக்கும் வயதில் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். நாட்டின் அடுத்த தலைமுறைகள் இந்த குழந்தைகள் தான். அவர்களின் வாழ்வு சீரழிக்க யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.புகாருக்கு எண் :1098 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
புதுவையில் உலக வங்கி நிதிகள் சம்பந்தமான கூட்டத்தில் எந்த சட்ட விதியின் கீழ் சபாநாயகர் அழைக்கப்பட்டார் என அவரை அழைத்த அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்க வேண்டும். கடந்த காலங்களில் சபாநாயகர் தொடர்பான மரபுகளை மீறப்பட்டிருந்தாலும், மீண்டும் மரபுகளை மீறுவது ஆளுநர் அனுமதிக்க கூடாது, சபாநாயகரின் செயலை முதல்வர் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார் என அதிமுக செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டினார்.
திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்னிக்கு சென்று கொண்டுருந்த கார் சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெங்களூரை சேர்ந்த கங்காலட்சுமி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.