India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிண்டியில் இன்று மாலை நடைபெற்ற தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் படைத்தலைவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில எல்லைகளில் நவீன சாதனங்களுடன் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், போதைப் பொருள், மதுபானம் உள்ளிட்டவை கடத்தப்படுவதைத் தடுக்க நவீன சாதனங்களுடன் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று(அக்.19 ) இரவு சில இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று(அக்.20) நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா நேற்று(அக்.19) இரவு விடுத்துள்ள வானிலை பதிவு தெரிவித்துள்ளார். எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை நாளைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும்.
மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் அருள்மிகு கோடீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை சுற்றி முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் அறநிலையத்துறை ஆணையர், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வழக்கமாக 5ஆம் தேதி வழங்கப்படும் ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும்.
குமரியில் கடந்த 15-10-2024, 16-10-2024, 17-10-2024 ஆகிய நாட்களில் ஏற்பட்ட கள்ளக் கடல் சீற்றத்தினால் குறும்பனை முதல் நீரோடித்துறை வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் இரையுமன்துறை பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனை உடனடியாக சீரமைக்க கேட்டு குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இன்று இரவு கோரிக்கை மனு வழங்கினார்.
தஞ்சாவூர், பாப்பா நாடு சாலை விபத்தில் இறந்த சிறப்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விபத்தில் இறந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என கூறினார்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாற்றினார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் இன்பாரகு மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் அறநிலையத்துறை சார்பில் 21 ஆம் தேதி 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற உள்ளது. இவர்களுக்கு சீர்வரிசை அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கோவில் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர். திருமணம் நடைபெறும் இடமான ராஜகோபாலசாமி கோவில் ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 எண்ணிற்கு அழைக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.