India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற பயிலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய http://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in ஆகிய மத்திய அரசின் இணையதளங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
தீபாவளியின் போது சீட்டு நடத்துபவர்கள் தயாரிக்கும் இனிப்புகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்று விற்க வேண்டும். மேலும், மக்கள் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கும் விவர சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
2024-25ஆம் கல்வியாண்டின் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல் (National Scholarship Portal) மூலம் பெறலாம். விண்ணபிக்க கடைசி நாள் வரும் 31ஆம் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க கடைசி நாள் நவ.15ஆம் தேதி ஆகும். 9, 11ஆம் வகுப்பு புதிய விண்ணப்பதாரர்கள் 60% மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். <
‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- 2024’ மாநில அளவிலான போட்டிகள் 15வது நாளாக இன்று (அக்.19) சென்னையில் நடைபெற்று வருகின்றன. மாநில அளவிலான பதக்கப் பட்டியலில் 159 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் சேலம் மாவட்டம் 3- வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 41 பதக்கங்களுடன் செங்கல்பட்டு மாவட்டம், 2 ஆவது இடத்தில் உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் சமயபுரம், திருச்செந்தூர் போன்ற கோவில்களில் இலவச திருமணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை காலை 10 மணிக்கு இலவச திருமணம் நடைபெற உள்ளது. இது திருமண விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். மேலும் இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மணமக்களின் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். SHAREIT
பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரத்தில் முதலீட்டாளர்களின் முழு விவரத்தை இணையத்தில் வெளியிட போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்த தொகைக்கான ஆதாரத்துடன், மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை நேரில் அணுகலாம் எனவும், நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் மீது அரசு நடவடிக்கை தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது
ராணிப்பேட்டையில் நாளை கலை பண்பாடு துறை சார்பில் குரல் இசை பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் விளாப்பாக்கம் ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (அக் 20) நாளை காலை 9 மணி முதல் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 04427269148/951152828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் ஆகியோர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யப்படவில்லையெனில் சீல் வைக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு வரும் 21ஆம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டதால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.