India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொது போக்குவரத்து வாகனங்கள் இல்லாத அந்த நாளில் புதுக்கோட்டை மக்கள் கால்நடையாகவே பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். திருச்சிக்கு கால்நடையாக செல்லும் பயணிகள் தங்கி இளைப்பார ரெங்கம்மா சத்திரம், அம்மா சத்திரம், நல்லூர், மாத்தூர் போன்ற இடங்களில் தொண்டமான் மன்னர்கள் சத்திரங்களை கட்டியிருந்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இன்னும் இந்த சத்திரங்களை காணலாம். “காலச்சுவடு”. ஷேர் செய்யவும்….
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் (அடுத்த 3 மணி நேரத்திற்கு) பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்லவும். ஷேர் பண்ணுங்க
காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், தமிழகத்தில் அரசின் கொள்கையும், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கக்கூடிய கொள்கையும் இரு மொழித் திட்டம் தான். இதனை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சிந்தனை இருக்கின்றதோ அதற்கு நேர்மறையான கருத்து தெரிவிப்பவர் தான் தமிழக கவர்னர் மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் இருக்கிறது என்பதே தவறு என்று கூறினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்லவும். ஷேர் பண்ணுங்க
தீபாவளி பண்டிகைக்காக மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் மலிவான விலையில் புத்தாடை வாங்குவதற்கு மதுரைக்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். ஜவுளிக்கடைகள் நிறைந்த விளக்கத்தூண் பகுதிகளில் இன்று காலை முதல் பொதுமக்கள் புத்தாடை வாங்க குவிந்ததால் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளித்தது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதுடன் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலை 66 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அக்டோபர் 22 இல் நடைபெற உள்ளது. அன்று மதியம் 2:30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி தலைமையில் உயர் கல்வி அமைச்சர் கோவி செழியன் பங்கேற்கிறார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார். பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை பதிவாளர் ராமகிருஷ்ணனும், அரசு ஆட்சி மன்ற குழுவினர் செய்கின்றனர்.
நீலகிரி: கோத்தகிரி அரவேனு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவக்குமார் என்பவர் பணி புரிந்து வந்தார். இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு மெஷினை சுத்தம் செய்யும் போது, பெல்ட்டில் எதிர்பாராமல் சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துடன் இருந்த தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தனி மாவட்டமாக உதயமானது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தூத்துக்குடி மாவட்டத்தை துவக்கி வைத்து அதற்கு வ.உ சிதம்பரனார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தூத்துக்குடி மாவட்டமாக பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகளை நேற்று சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்தவர் நாகார்ஜுனா இவருக்கு அயப்பாக்கம் சேர்ந்த விஸ்வ பிரியா என்பவருடன் கடந்த 45 நாட்கள் முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணவருடன் பைக்கில் தாய் வீட்டுக்கு சென்ற போது, கவரப்பேட்டை அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதில் விஸ்வ பிரியா படுகாயம் அடைந்தார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.