Tamilnadu

News October 20, 2024

கோவையில் 60 பள்ளி கட்டிடங்களை இடிக்க முடிவு

image

பருவமழை தீவிரமடைந்துள்ளதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இடியும் நிலையில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அதனை உடனடியாக இடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள 60 கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News October 20, 2024

விழுப்புரத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

நாகை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

துணை முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய ஆட்சியர் 

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் அடங்கிய நினைவு பரிசினை வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News October 20, 2024

காஞ்சிபுரத்தில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை இடி மின்னலுடன் கூடிய  கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News October 20, 2024

சென்னையில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான பட்டாசுகள் மிகக்குறைந்த விலையில் காவலர் திருமண மண்டபத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு புதுக்கோட்டை காவல்துறை சார்பாக அறிவிக்கப்படுகிறது. இடம் : காவலர் திருமண மண்டபம், ஆயுதப்படை வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை

News October 20, 2024

சீர்மரபினர் வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

image

சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 18 முதல் 60 வயதுக்கு மிகாதோரை வாரிய உறுப்பினராக சேர்த்தல், புதுப்பித்தல் & நலத்திட்ட உதவி கோரும் மனு பெறும் முகாம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்நாள் அக்.24 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அரங்கில் நடைபெற உள்ளது. உரிய தகுதியுடைய சீர்மரபினர் இனத்தை சார்ந்தோர் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபர்-20, 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!