India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை நாவல் போரில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“ அழிக்கால் – பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராமத்தில் அண்மையில் கடல்நீர் உட்புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது; நான் அங்கு நண்பர்களுடன் சென்று தலைவர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினேன்; அப்பாது, என்னை உளவுத்துறை போலீசார் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து கண்காணித்தனர்” என குற்றச்சாட்டியுள்ளார்
சென்னை சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் (46). இவர் தொழில் சம்பந்தமாக தஞ்சாவூர் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது வளம்பக்குடி அருகே இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் 50,000 ரொக்கம், தங்க செயின் வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரபியா, மயூரி, தேவயாணி, காமரசவள்ளி ஆகிய நான்கு திருநங்கைகளை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் சற்று முன்னர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, 8 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை புதிய திட்டமான, கலைஞர் கடன் உதவி திட்டத்தில் நடைமுறை மற்றும் மூலதன கடன் பெறலாம். கூடுதல் விவரித்துக்கு தாய்கோ வங்கி, மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
திருப்புவனம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பால்வண்டியினை மறைத்து சோதனை செய்தபோது, அதில் 96 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும், பால்வண்டியையும் பறிமுதல் செய்து திருப்புவனத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் முனியசாமியை திருப்புவனம் போலீசார் கைது செய்து இன்று விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பௌர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில் கிரிவலப் பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் இன்று அதிரடியாக அகற்றினர்.
செங்ல்பட்டில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-23 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT
கும்பகோணம் மாத்தி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார். இசைக்கலைஞரான இவர் கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.