Tamilnadu

News October 21, 2024

மக்கள் குறைதீர் முகாமில் 381 புகார் மனுக்கள் 

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்க் கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 381 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News October 21, 2024

தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம்

image

தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை கோவை திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு புதியதாக 14,160 பேருந்துகள் இயக்க உள்ளது. அதில் சராசரியாக நாகை -வேளாங்கண்ணி வரை செல்லும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

News October 21, 2024

அரசு உரிமம் பெற்ற பலகாரங்கள் மட்டுமே விற்பனை

image

தீபாவளியின் ஒரு பகுதியாக பலகாரங்களும் இடம்பெறுவது வழக்கம். பலகாரங்களை உற்பத்தி செய்பவர்கள் https://foscos.fssai.gov.in என்ற தளத்தில் உரிமம் பெற்று தகுந்த தரத்துடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தயாரிக்கும் பலகாரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் உணவு பொருள் சம்பந்தமான புகார்களுக்கு 94 44 04 23 22 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News October 21, 2024

திண்டுக்கல்லில் துணை முதல்வருக்கு வரவேற்பு

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடைபெறுகிற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத்திருமணவிழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்லும் வழியில் நாகல் நகர், சாணார்ப்பட்டி, நத்தம் பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் பெருமளவு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டுவந்து வரவேற்பு இன்று அளித்தனர்.

News October 21, 2024

தங்கப் பதக்கம் பெற்ற கல்லூரி மாணவர்

image

மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சி.சமுத்திரம் தங்கப் பதக்கம் பெற்றார். சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் 18.10.2024 அன்று நடைபெற்ற தமிழக அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பிரிவில் தடகளப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.

News October 21, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக் 21) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

கிருஷ்ணகிரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

image

காவல் துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக மைதான வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூணிற்கு இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் “காவலர் வீர வணக்கம் நாள் உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

News October 21, 2024

ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு திருமணம்

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் திருக்கோயில்கள் சார்பில் ஈரோடு திண்டல் சைதயன்யா பள்ளி வளாகத்தில் 27 மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் AG.வெங்கடாசலம் MLA, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய எஸ் பி

image

ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமை மைதானத்தில் இன்று காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

News October 21, 2024

கள்ளக்குறிச்சியில்  விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆவது அதில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் இதில் பங்கேற்ற பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!