India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் ‘NEET’ பயிற்சி மையம் ஒன்றில் மாணவர்களை அடித்து சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், சம்மந்தப்பட்ட ‘NEET’ பயிற்சி மையத்தின் விடுதியை இன்று(அக்.,21) நிர்வாகம் காலி செய்தது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதே நேரத்தில் அப்பயிற்சி மையத்தில், வகுப்புகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. வகுப்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவர் தனது தந்தையை 2016ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றவாளி டேவிட் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமாக ரூ.2,000 விதித்து நீதிபதி மனோஜ் குமார் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்று (அக்.21) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் நாளை (22.10.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மேயர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கன மழையின் காரணமாக நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி வாரத்தில் கோவை – நெல்லை இடையே வரும் ரயிலில் முன்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. தொழில் நகரமான கோவை, திருப்பூர் பகுதியில் பணி செய்யும் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் நலன் கருதி தீபாவளிக்காக கரூர்- மதுரை- ராஜபாளையம்- தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில் கோவையில் இருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்க் கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 381 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை கோவை திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு புதியதாக 14,160 பேருந்துகள் இயக்க உள்ளது. அதில் சராசரியாக நாகை -வேளாங்கண்ணி வரை செல்லும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியின் ஒரு பகுதியாக பலகாரங்களும் இடம்பெறுவது வழக்கம். பலகாரங்களை உற்பத்தி செய்பவர்கள் https://foscos.fssai.gov.in என்ற தளத்தில் உரிமம் பெற்று தகுந்த தரத்துடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தயாரிக்கும் பலகாரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் உணவு பொருள் சம்பந்தமான புகார்களுக்கு 94 44 04 23 22 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடைபெறுகிற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத்திருமணவிழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்லும் வழியில் நாகல் நகர், சாணார்ப்பட்டி, நத்தம் பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் பெருமளவு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டுவந்து வரவேற்பு இன்று அளித்தனர்.
மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சி.சமுத்திரம் தங்கப் பதக்கம் பெற்றார். சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் 18.10.2024 அன்று நடைபெற்ற தமிழக அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பிரிவில் தடகளப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக் 21) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.