India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி 23.10.2024 தேதி உத்திரமேரூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6.00 வரை மணிக்கு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கலாம் என தெரவித்துள்ளார்.
ஓடிசா மாநிலத்திலிருந்து, பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, ஓஎம்ஆர் சாலையில் பாண்டிச்சேரி நோக்கி சென்றது. அப்போது பையனூர் பகுதியில் பின்னால் வந்து கார்களுக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியதாக தெரிகிறது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.21) வத்திராயிருப்பு ரங்காராவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 112வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு கல்லூரிகள் தேர்வு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
பொதுமக்களின் உதவிக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இன்று (அக்.21) இரவு ரோந்து அதிகாரிகள் விபரம் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அதில் காவல் நிலையங்கள் மற்றும் ரோந்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் அவர்களின் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை பொதுமக்கள் உதவிக்கு பயன்படுத்திக்கொள்ள மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்.பி ஷ்ரேயா குப்தா குற்ற செயல்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று 21ஆம் தேதி இரவு திங்கட்கிழமை வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பெயர் மற்றும் மொபைல் எண்கள் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டு (அக்,21) லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்று இருந்த இடத்தில் சீனா ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (அக்,21) இராமநாதபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஏலம்மன்ன பகுதியில் இயங்கி வரும் தனியார் அறக்கட்டளையில் பணியாற்றி வரும் சரண்யா தேவி என்பவர் தனது மாமனார் ரங்கநாதனுடன் பயணித்த காரை பந்தலூர் கொளப்பள்ளி சாலை இலியாஸ் கடை அருகே காரை வழிமறித்த யானை காரை சேதப்படுத்தியது. காருக்குள் இருந்த இருவருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இல்லை இந்த விபத்து குறித்து சேரம்பாடி வரச்சரகர் அய்யனார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாநகர காவல்துறை சார்பில் தினமும் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அட்டவணை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்.21) மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலையங்களின் காவலர்கள் பெயர்கள், அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இவர்களை இரவு நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.
சேலம் மாநகரில் தொடர் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுப்பட்டு வந்த கிச்சிப்பாளையத்தில் சேர்ந்த ஆஷிக் அலி, வழிப்பறி வழக்குகளில் ஈடுப்பட்டு வந்த கௌதம் (எ) பொக்கையன் ஆகியோர் முதன்முறையாகக் மற்றும் தொடர் திருட்டு குற்ற செயலில் ஈடுபட்ட கன்னங்குறிச்சியை சேர்ந்த முத்து (எ) முத்தையன் 4வது முறையாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்துசிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீன் குமார் உத்தரவு
ஈரோடு மாநகர் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் எஸ் சி எஸ் டி மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும்.பஞ்சம் நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை தகுதியானவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.