Tamilnadu

News October 22, 2024

குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால் இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க.! 

image

மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவில் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள உட்கோட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல், அரசு அனுமதிக்காமல் மது விற்பனை செய்தல், போதைப்பொருள் நடமாட்டம் பற்றிய தகவல்களை 1081 மற்றும் 9498101765 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியம் பாதுகாக்கப்படும் என மாவட்ட காவல்துறை நேற்று (அக்.21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News October 22, 2024

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கும் எஸ்.பி

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பாக தென்காசி சைபர் பிரிவு மற்றும் ஸ்ரீ கண்ணா கல்வி குழுமம் இணைந்து சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு மற்றும் பேரணி நிகழ்ச்சி இன்று (அக்.22) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் துவங்கி வைக்க உள்ளார். இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News October 22, 2024

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

image

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு மோசடிகள் குறித்தும், இணையதளம் மோசடிகள் குறித்தும், விபத்துக்கள் குறித்தும், குற்ற செயல்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (அக்.21) பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்போம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புக்கு 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். 

News October 22, 2024

அனுமதி இன்றி சீட்டு விளையாடிய 3 பேர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செண்பகத்தோப்பு பேமலையான்கோவில் அருகே பொது இடத்தில் அனுமதியின்றி சீட்டு விளையாடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், காமராஜ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 52 சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News October 22, 2024

நாகர்கோவிலில் இந்து மகாசபை மாநில செயற்குழு கூட்டம்

image

அகில பாரத இந்து மகாசபை மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாநிலத் தலைவர் தா. பால சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மகாசபை மாநில இணை அமைப்புச் செயலாளராக துரைராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் இந்து மகாசபை மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

News October 22, 2024

ஆம்பூரில் 2.39 கோடி வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் அதிர்ச்சி 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் பெயரில் தொடரும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு சம்பவங்களால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

News October 22, 2024

4.45 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 4.45 லட்சம் குடும்பங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மொத்த காப்பீடு திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி  (23.7.2009) அன்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.

News October 22, 2024

சுரண்டைக்கு மதுபான கடை வேண்டாம் – தேமுதிக மனு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சுரண்டையில் இயங்கி வரும் தனியார் மதுக்கடையை மூட வலியுறுத்தி தேமுதிக சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் தேமுதிக நிர்வாகிகள் கருப்பு நிலா கணேசன் தென்காசி நகர செயலாளர், மகேந்திரன்நகர துணை செயலாளர் நயினார், ரமேஷ் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News October 22, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25/10/2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டுறவுகள் நடைபெறுகிறது. எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

விழுப்புரத்தில் ரத்ததான முகாம்

image

விழுப்புரம் மஹாலஷ்மி பிளாசா நிறுவனர் கே.ஜே.ரமேஷின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ரத்த தான முகாம் நடந்தது. இந்நிகழ்வில் விழுப்புரம் மஹாலஷ்மி பிளாசாவில் நடந்த முகாமில், 175 நபர்கள் ரத்த தானம் செய்தனர். மேலும் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

error: Content is protected !!